.

Saturday, March 24, 2007

இந்திய அணிக்கு முழுபாதுகாப்பு-ஐசிசி உறுதி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கச் சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் தங்கியிருக்கும் எஞ்சிய நாட்களில் போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று ஐசிசி உறுதி கூறியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய அணி நிர்வாகத்திற்கு ஐசிசி அனுப்பியிருக்கும் கடிதத்தில் இந்த உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

உல்மர் கொலையைத் தொடர்ந்து உருவாகியுள்ள பீதியால் இந்திய அணி அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறி ஐசிசி நேற்று கடிதத்தை அளித்திருப்பதாக போர்ட் ஆப் ஸ்பெயினில் இந்திய கிரிக்கெட் அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய அணிக்கான பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இந்திய அணியின் பாதுகாப்புக்கு மத்திய அரசு 2 கோடி ரூபாய் வரை செலவிட இருப்பதாக அறிவித்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

இந்திய அணியின் பாதுகாப்புக்கான உதவி ஆணையர் மதூப் குமார் திவாரி இந்திய அணியினருடன் பயணம் செய்து வருவதாகவும், இந்திய அணியினரை ஏற்கனவே சந்தித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.

Thanks: MSN Tamil

37 comments:

சிறில் அலெக்ஸ் said...

can we send some killers instead?
:)

Boston Bala said...

---''அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்'''---

இன்னொருத்தரை அடித்தல் பாவம். சத்தியாகிரகம் வளர்த்த நாடு. சாத்வீகமாக போராடுவோம் :)

Anonymous said...

இந்தியா தனது ராணுவ படையணியை தயாராக வைத்துள்ளது.

கிரிக்கட் ரசிகர்களிடமிருந்து இந்திய அணியை பாதுகாக்க இந்தியா தனது ராணுவத்தை தயாராக வைத்துள்ளது.

இந்திய வீரர்கள் மேற்கிந்திய தீவுகளில் குடியுரிமை பெறும் யோசனையில் உள்ளனர்.:)))))

தோத்திட்டு இந்தியாவுக்கு திரும்பி வர்றதையே இவனுங்க யாரும் நெனைக்கக்கூடாது.

Avanthika said...

நான் அங்க போட்ட அதே கமென்ட்

''அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்'''

இது என்னமோ அம்மா சொல்லீட்டு சிரிச்சாங்க..எழுதி வாங்கீட்டு வந்து டைப் பன்ணி இருக்கேன்..உங்களுக்கு புரிஞ்சா சிரிங்க

இப்ப இதுக்கு meaning கேட்டா அடிக்க வந்துடுவாங்க

Boston Bala said...

---IF WE WIN SANDHOSHAM...IF NOT..TENSION ILLAAMA YAARU VILAADINAALUM,---

அப்படொயொரு நிலமைக்குத் தள்ளப்பட்டால், ஐ வில் சப்போர்ட் ஆஸி

சிறில் அலெக்ஸ் said...

சற்றுமுன்(Faking news) சச்சினின் டூத் ப்ரஷ் காணவில்லை. வீட்டுக்கு பொருட்களை அடுக்கி வைக்கும்போதூ தேடினார். 'ஊத்த'ப்பாவை சந்தேகிக்கிறார்கள்.

Avanthika said...

//அப்படொயொரு நிலமைக்குத் தள்ளப்பட்டால், ஐ வில் சப்போர்ட் ஆஸி///

ஆஸியா?...no chance...i will support who ever plays opp to them

Avanthika said...
This comment has been removed by the author.
Boston Bala said...

---சச்சின் எடுத்து வந்தார் பெரிய மட்டை
ஸ்கோர் போர்ட்டப் பாத்தா முட்டை---

கவிதை என்பது காலத்துக்கும் பொருந்த வேண்டும் என்பதை டிஆர் நிரூபித்துள்ளார். எழுதியவுடன் தோனிக்கும் ஒத்துவருமாறு அமைத்துள்ளார். காலத்தை வெல்லும் காவியம்!

சிறில் அலெக்ஸ் said...

இலங்கையை வெல்வதைவிட காலத்தை வெல்வது ஈசின்னு நினைக்கிறேன்.
:))

சிறில் அலெக்ஸ் said...

அகர்க்கர் காலி

Avanthika said...

Anna
even if India looses..SATRUMUN has won...everyday it strikes a century

CONGRAAAAAAAATS SATRUMUN..
:--)))....

Boston Bala said...

22 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள்(தான்) எடுத்திருந்தது.

தேவை: 117 ரன்
பந்து: 90
விக்கெட்: 3

Boston Bala said...

பால ஜோதிடம்: ஆட்டம் tie-இல் முடியும்

Santhosh said...

டிராவிட் தோல்விக்கி என்னா காரணம் அப்படின்னு இங்க சொல்லி இருக்காரு பாருங்க.

சிறில் அலெக்ஸ் said...

பாபா.. நீங்களுமா?
சும்மா ஸ்டாட்ஸ் அவுத்து விடுறீங்க.

:)

Boston Bala said...

Mdeii life: An Inquiry into the Nature and Causes of Winning Cricket Teams: "there are the winning teams and there are the exciting teams, and they are different from each other.... consistent winners are predictable and boring. "

சிறில் அலெக்ஸ் said...

//Robin Uthappa has come on as a bye-runner for Dravid. Meanwhile a sentimental mail has come in from Vineet. " remember not so long ago (only 15 years back) listening to Radio hearing first true exploits of Tendulkar thrashing the Kiwis in Kiwiland for some 80 runs. The first glimpse of the Master Blaster or for that matter the India Pak final in Bangladesh where Ganguly refused to take light and refused to leave the field. Or the Dravid Ganguly partnership in Tounton where sixes and fours where raining with no end.


Gone are those days and only memories remain. I remember thinking that by the time I can relish this without the stress of studies or board exams or a hostel with no tv all these Mega larger than life cricketers will be old and gone.


This is perhaps the last time the 3 big guns will be together in a world cup do or die match and this world cup for sure will be there last together.I didn't wish for a win. All I wished for was a spectacle a blaze emanating from there bat that keeps there last memory in my mind as good as there first for the rest of my life.
Sadly it was not to be!

Sourav Ganguly, Sachin Tendulkar and Rahul Dravid - Thank you! I am honored to have lived and seen you play .......//

from Cricinfo

ஆதிபகவன் said...

சிறில் எங்க இருக்கிறீங்க. இந்தியாவிலா,
இல்லாட்டி யு.எஸ் வந்தீட்டீங்களா?

இந்தியாவோட நெலமைய பார்த்தீங்களா?

கிரெய்க் சப்பல் ஹெல்மட்,புல்லட் புரூவ் ஜாக்கட் எல்லாம் ஆர்டர் பண்ணியிருக்கிறார்.

சிறில் அலெக்ஸ் said...

//சிறில் எங்க இருக்கிறீங்க. இந்தியாவிலா,
இல்லாட்டி யு.எஸ் வந்தீட்டீங்களா?//

இனிமேதான் இந்தியா வரப்போறேன்.

Anonymous said...

டிராவிட் ஒரே ஓவரில் நாலு four .. இன்னும் மேட்ச் கையில இருக்கு :)

சிறில் அலெக்ஸ் said...

//டிராவிட் ஒரே ஓவரில் நாலு four .. இன்னும் மேட்ச் கையில இருக்கு :) //

இல்லைன்னு சொல்லலியே.. இலங்கை கையில் இருக்குது...

Anonymous said...

// டிராவிட் ஒரே ஓவரில் நாலு four .. இன்னும் மேட்ச் கையில இருக்கு

முரளிதரன் கைக்கு போயிடுச்சு

Boston Bala said...

oh... dravid :((

Boston Bala said...

முரளிக்கு இன்னும் மூன்று ஓவர். அதற்கப்புறம் இந்தியா விளாசும். வேகப்பந்து வீச்சாளர்களைத் தொட்டால் போது... சிக்ஸர் (இது பெரிய கிரவுண்டா? சின்ன ஆடுகளமா?)

சிறில் அலெக்ஸ் said...

பஞ்ச் லைன்ஸ்:
ரஜினி: நான் ஒரு ரன் எடுத்தா நூறு ரன் எடுத்தது மாதிரி.

கமல்: அவன நிறுத்தச் சொல்லு.. சும்மா விக்கட் எடுத்துகிட்டே இருக்கானே அவன நிறூத்தச் சொல்லு.

விஜயகாந்த்: தெருவுல வெளயாடிட்டு டீமுக்கு வர்றவனுக்குத்தான் தெரியும் சும்மா ரெக்கமெண்டேசன்ல வந்தவனுக்கெல்லாம் இப்படிதான்.

சத்யராஜ்: அட கிரிக்கட்டையே புரிஞ்சிக்கமாட்டீங்குறீங்களே.. அவுட்டு அவுட்டு(தகடு தகடு ஸ்டைல்ல).

வடிவேலு: இத்தன விக்கட் விழுந்தும் நின்னு 4 அடிக்கிறாரே இவரு எவ்வளோ நல்லவருடா.

:))

ஆதிபகவன் said...

இந்தியா 9 விக்கட் அவுட்.

ஆதிபகவன் said...

இந்திய டீம் விளையாடினதுக்கு பதிலா அவங்களுக்கு பாதுகாப்புக்கு போன அந்த 16 வீரர்கள் விளையாடியிருக்கலாம்.

Boston Bala said...

---இந்தியா 9 விக்கட் அவுட்.---

இன்னும் ஒரு விக்கெட் இருக்குன்னு நினைக்கிறவன் ஆப்டிமிஸ்ட் ;)

Boston Bala said...

எழுதி முடிப்பதற்குள் போயிடும்னு நெனச்சா இந்தியா-மிஸ்ட்

சிறில் அலெக்ஸ் said...

ஹர்பஜன் 4,6 அடிக்கிறார்..
சச்சின வெறுப்பேத்தணும்னு முடிவு செஞ்சுட்டார்போல.

Boston Bala said...

The Desi Fan - The Times of India: "India is a nation of losers: its teams win at nothing but cricket. Two, because cricket fans from outside the subcontinent have generally played some outdoor sport, they have some practical experience of how difficult competitive sport is.

You're a voyeur: the sort of person who watches other people do it. It is a 'virtual'condition, unmediated by experience or empathy. "

Anonymous said...

ஆல் (இந்தியா) அவுட்

சிறில் அலெக்ஸ் said...

எல்லாரும் போய் தூங்குங்கப்பா..

Boston Bala said...

What if England are beaten on Saturady by Kenya?

Anonymous said...

//சிறில் அலெக்ஸ் said...
எல்லாரும் போய் தூங்குங்கப்பா..
//

தளராதீர்கள்.
இன்னும் சான்ஸ் இருக்கு.
பங்களாதேஷ் பெர்முடாவிடம் தோற்றால் நாம் உள்ளே.
நூறு கோடிக்கு மேற்பட்டவர்களின் வேண்டுதலை கடவுள் கேட்காமல் விட்டுவிடுவாரா என்ன?

கவிதா | Kavitha said...

Boost is the secret of our Energy !!!

-o❢o-

b r e a k i n g   n e w s...