.

Monday, March 5, 2007

ஆவின் பால் விலை உயர்வு

ஆவின் பாலின் விலை ரூ1.25வீதம் அனைத்து இரகங்களுக்கும் ஏற்றப்பட்டுள்ளது.கொள்முதல் விலையும் ஒரு லிட்டருக்கு ரூ10.50இலிருந்து ரூ12/-க்கு உயருகிறது.

The Hindu செய்தி

2 comments:

Boston Bala said...

ஜெயலலிதா ஆட்சியில்தான் பால் விலை அதிகமாக உயர்த்தப்பட்டது: கருணாநிதி பதில்

சென்னை, மார்ச் 14: ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில்தான் பால் விலை அதிகமாக உயர்த்தப்பட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார் :: 1991 முதல் 1996 வரையில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, பாலின் விலையை ரூ.5-லிருந்து ரூ 8-ஆக அதாவது ரூ.3 உயர்த்தியது. அதோடு அதை நியாயப்படுத்திப் பேசிக் கொண்டிருந்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. தற்போது இந்த ஆட்சியில் ஒரு ரூபாய் 25 காசுகள் மட்டும் உயர்த்தியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

2001-ல் ஆட்சிக்கு வந்ததும் 1.12.2001 அன்று பாலின் விற்பனை விலையை ரூ.10.50-லிருந்து ரூ.12.50-ஆக அதாவது ஒரே கட்டத்தில் தமிழக சரித்திரத்திலேயே இரண்டு ரூபாய் அளவுக்கு உயர்த்தியவர் இதே ஜெயலலிதாதான்.

Boston Bala said...

ஆவின் நிர்வாகத்தை சீரழித்தது திமுக அரசுதான்: கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்

நான் ஆட்சிப் பொறுப்பேற்ற போது முந்தைய திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டினால் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் பெருத்த நஷ்டத்தில் இயங்கி வந்தன. இது மட்டும் அல்லாமல் 2001-ம் ஆண்டு மே மாத நிலவரப்படி உறுப்பினர்களுக்கு சங்கங்கள் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 35 கோடியாக இருந்தது. இதன் காரணமாக ஆவின் நிர்வாகம் இழுத்து மூடுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

மேலும் 2001-ம் ஆண்டு திமுக அரசு கடனாக கொடுத்த ரூ. 28 கோடியை நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆவின் நிர்வாகத்துக்கு மானியமாக அளித்து, அதற்காக வட்டித் தொகையையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டேன். என்னுடைய ஆட்சி காலத்தில் திறமையான நிர்வாகத்தின் காரணமாக பால் உற்பத்தியாளர்களுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகை முழுவதும் பட்டுவாடா செய்யப்பட்டதோடு மட்டும் அல்லாமல் ஆவின் அமைப்பு லாபத்தில் செயல்படத் தொடங்கியது. எனது ஆட்சிக் காலம் வரையில் ஆவின் நிர்வாகம் லாபத்தில் இயங்கி வந்ததோடு மட்டும் அல்லாமல் பால் உற்பத்தியாளர்களுக்கு 10 நாள்களுக்கு ஒரு முறை நிலுவையின்றி பால் கொடுத்தற்கான பணம் வழங்கப்பட்டது. நிலைவைத் தொகை எதையும் பாக்கி வைக்கவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் பால் உற்பத்தியாளர்களுக்குத் தர வேண்டிய நிலுவதைத் தொகை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

-o❢o-

b r e a k i n g   n e w s...