.

Monday, April 16, 2007

ச: ஊட்டியில் இந்தியா-சீனா எல்லைப் பேச்சுவார்த்தை!

ஞாயிறு, 15 ஏப்ரல் 2007

இந்திய-சீன இடையிலான எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண நடைபெற்று வரும் பேச்சுவார்ததையின் அடுத்தகட்டம் வரும் சனிக்கிழமை டெல்லியிலும், மறு நாள் ஊட்டியிலும் நடைபெற உள்ளது.

60 ஆண்டு காலத்திற்கு மேல் நீட்டித்து வரும் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண இதுவரை நடைபெற்ற 9 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, எல்லைகளை வகுக்கும் முக்கியக் கட்டப் பேச்சுவார்த்தை வரும் சனி, ஞாயிறு தினங்களில் நடைபெறுகிறது.

சீனத்தின் சார்பாக அந்நாட்டு அயலுறவுத் துணை அமைச்சர் தாய் பிங்குவா, இந்திய தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோர் தலைமையிலான குழுக்கள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடும்.

"வெப் உலகம்"

1 comment:

மாசிலா said...

இதில் விளையாட்டு என்னவென்றால், இப்பேச்சு வார்த்தைக்கு சற்றுமுன் இந்தியா 3000 கி.மீ போகக்கூடிய அணுதாங்கி வான் வெடி குண்டு சோதனை செய்தபிறகு இது நடக்கிறது. கட்டாயமாக இந்தியா இந்த சோதனையை இப்போதைக்கு இந்த பேச்சு வார்த்தையை கவனத்தில் கொண்டே செய்திருக்குமோ என கேள்வி கேட்க வைக்கிறது. சீனர்களும் இதை கருத்தில் கொண்டே பேச்சு நடத்துவார்கள் என்றே நினைக்கிறேன். இந்தமாதிரியான அதிர்ச்சி வைத்தியத்தினால் நோய் சீக்கிரமே குணமாகவும் வாய்ப்புண்டு.
பொறுத்திருந்து பார்ப்போம்.

-o❢o-

b r e a k i n g   n e w s...