ஏப்ரல் 15, 2007
சென்னை: சங்கராச்சாரியாரை கைது செய்து பெரும் பரபரப்புக்குள்ளான எஸ்.பி. பிரேமகுமார் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
21 ஆண்டுகளுக்கு முன் ராணுவ வீரர் நல்லகாமன் என்பவரையும் அவரது மகனையும் தாக்கி ரோட்டில் கைவிலங்கு போட்டு இழுத்துச் சென்றது, ராணுவ வீரரின் மனைவியை தாக்கியது மற்றும் பெண் ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து தாக்கியது ஆகிய வழக்குகளில் சமீபத்தில் பிரேமகுமாருக்கு எதிராக சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
21 ஆண்டுகளாக இந்த வழக்கை இழுத்தடித்து வந்த பிரேம்குமாரை நீதிமன்றத்தில் சரணடையவும், அவருக்கு ஜெயில் தண்டனை வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக ஜெயேந்திரருக்கு எதிரான வழக்கில் அப்ரூவரான ரவிசுப்பிரமணியத்தை, திமுக ஆட்சிக்கு வந்த பின் நேரில் சந்தித்த பிரேம்குமார், அவரை தப்பிச் செல்லுமாறு கூறி சிக்கலில் மாட்டினார். அந்த விவகாரத்தில் பிரேம்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
இப்போது நல்லகாமன் வழக்கிலும் உச்ச நீதிமன்றத்திடம் கண்டனம் பெற்றுள்ளார் பிரேம். இதையடுத்து அவரை பதவியில் இருந்தே டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
அரசு ஊழியர் நன்னடத்தைப் பிரிவு 3 (11)ன் கீழ் பிரேம்குமார் மீது இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.
இந்தப் பிரிவின்படி எந்த விளக்கமும் கேட்காமலேயே பதவி நீக்கம் செய்ய முடியும். தேச துரோக செயல்களுக்குத் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்போது பிரேம் குமார் மீது இந்தப் பிரிவில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
"Thatstamil"
Monday, April 16, 2007
சங்கராச்சாரியாரை கைது செய்த எஸ்.பி.பிரேம்குமார் திடீர் டிஸ்மிஸ்
Labels:
அரசியல்,
சட்டம் - நீதி,
தமிழ்நாடு
Posted by சிவபாலன் at 2:04 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
4 comments:
எஸ்.பி பிரேம்குமார் முன்பு சீவலப்பேரி பாண்டியை என்கவுண்டர் செய்து புகழ் பெற்றவர்.இப்படிப்பட்ட ஒரு அரசு அதிகாரி நல்லகாமன் எனும் முன்னாள் ராணுவவீரரை அடித்து ரோட்டில் இழுத்து சென்றதும் அவர் மனைவியின் புடவையை போலிஸ் ஸ்டேஷனில் வைத்து உரிந்ததும் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.காலம் தாழ்ந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்பது இந்த விஷயத்தில் உறுதியாகி இருக்கிறது.
பாதிக்கப்பட்டவர் ராணுவவீரர் என்பதால் மனத்துணிவுடன் 25 ஆண்டுகளாக இந்த வழக்கை அவரால் நடத்த முடிந்தது.பொதுமக்கள் இதுபோல் செய்திருக்க முடியுமா என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.
பாண்டி ஆபரேஷனில் புகழ்பெற்ற பிரேம், வீரப்பன் ஆபரேஷனில் புகழ் பெற்ற விஜயகுமார், நக்சலைட் ஒழிப்பில் புகழ் பெற்ற தேவாரம், இமாம் அலியை அழித்து புகழ் பெற்ற ஷாகில் அக்தர்,சிவராசன் சுபா ஆபரேஷன் புகழ் கார்த்திகேயன் ஆகியோர் தமிழக போலிஸ் துறையின் ரோல்மாடல்களாக இருந்தனர்.அதில் ஒரு ரோல்மாடல் இப்படி வீழ்ந்தது அதிர்ச்சியை அளிக்கிறது.
சங்கராச்சாரியார் வழக்குபற்றி நண்பர்கள் பலர் விரைந்தோடிவந்து விளக்கம் அளிப்பார்கள் என நினைக்கிறேன்:))).இந்த வழக்கில் ஒரு காமடி என்றால் சங்கராச்சாரியார் தரப்பில் பிரேம்குமாரை ஒரு ராட்ச்சன் ரேஞ்சில் திட்டுவதும், சங்கராச்சாரியாருக்கு எதிர்த்தரப்பில் பிரேம்குமார் சங்கராச்சாரியாருக்கு பலசலுகைகள் தந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது:))
திமுக அரசில் அவர் தண்டிக்கப்பட காரணம் அதிமுகவுக்கும் அவருக்கும் இருந்த நெருக்கமே என நினைக்கிறேன்.அம்மா ஆட்சிக்கு வந்தால் பிரேம்குமார் மீண்டும் பதவிக்கு வருவார் என எதிர்பார்க்கலாம்:))
பிரேம்குமார் டிஸ்மிஸ் இல்லை : அரசு விளக்கம்
சென்னை:"பிரேம்குமார் எஸ்.பி., டிஸ்மிஸ் செய்யப்படவில்லை' என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் சங்கர்ராமன் கொலை வழக்கு சாட்சிகள் சிலரை திசை திருப்ப முயற்சி செய்தார் என்ற புகாரின் அடிப்படையில் பிரேம்குமார் எஸ்.பி., சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், முன்னாள் ராணுவ வீரரை கைகளில் விலங்கு மாட்டி இழுத்துச் சென்ற வழக்கில் அவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அவர் சரண் அடைய தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், பணியில் இருந்து பிரேம்குமார் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக நேற்று முன்தினம் இரவு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு நேற்று விளக்கம் அளித்துள்ளது. பிரேம் குமார் எஸ்.பி., டிஸ்மிஸ் செய்யப்படவில்லை. அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக வெளிவந்த செய்திகள் தவறானவைஎன்று தமிழக உள்துறை செயலர் மாலதி தெரிவித்துள்ளார்.
அந்தாள் சங்கராச்சாரியாரை கைது செய்யவில்லை என்றாலும் அவரை நடப்பு அரசு தூக்கியிருக்கும். காரணம் அவர் "அம்மா" அப்பாயிண்டட்!
/*** எஸ்.பி பிரேம்குமார் முன்பு சீவலப்பேரி பாண்டியை என்கவுண்டர் செய்து புகழ் பெற்றவர் ***/
Are you Sure.....
Post a Comment