.

Monday, April 16, 2007

ச: இந்து-முஸ்லீம் கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும்: தஸ்லீமா

ஏப்ரல் 15, 2007

போபால்: இந்து-மூஸ்லீம் கலப்புத் திருமணங்களை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என வங்கதேச எழுத்தாளரான தஸ்லீமா நஸ்ரின் கூறியுள்ளார்.

இஸ்லாம் குறித்து அவர் எழுதிய சர்ச்சைக்குள்ளான நாவலையடுத்து அவருக்கு எதிராக வங்கதேசத்தில் பத்வா பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் நாட்டைவிட்டு வெளியேறினார். இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வசித்து வந்த அவர் சமீபகாலமாக பலத்த பாதுகாப்புடன் இந்தியாவில் தங்கியுள்ளார்.

இந் நிலையில் போபாலில் உள்ள பாரத் பவன் பல் கலை மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு அவர் பேசுகையில்,

இந்தியாவில் இந்து பெண்ணும் மூஸ்லீம் ஆணும் திருமணம் செய்துக் கொண்டு படும் துனபங்களை கண்டால் வருத்தம் தான் வருகிறது.

இது போன்ற திருமணங்களை எதிர்ப்பதற்கு பதிலாக வரவேற்று ஆதரிக்க வேண்டும்.

"Thatstamil"

3 comments:

Vajra said...

a muslim man will marry hindu women, the vice versa should happen as well.

A muslim woman marrying hindu man. Only then its complete. There cannot be one way traffic.

There is a specific decree to restrict a mulsim women to marry outside the community. The same does not apply to a muslim man, why ?

அரவிந்தன் நீலகண்டன் said...

மதமாற்றம் இல்லாத மதகலப்பு திருமணங்களை வரவேற்போம்.

அரவிந்தன் நீலகண்டன் said...

வஜ்ரா, காதல் திருமணங்களை இந்து தருமம் ஏற்றுக்கொள்கிறது. (விக்டோ ரிய மொராலிடியும் சாதியமும் இணைந்த விசித்திர கலவையான மிடில்கிளாஸ் மெண்டாலிட்டி எல்லா சமுதாயங்களிலும் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.) ஆனால் இஸ்லாமில் காதல் மணம் தடைசெய்யப்பட்டது. பெண் திருமணத்துக்கு முன்னர் ஒரு அன்னிய ஆணிடம் பேசி பழகி காதலிப்பதை அது ஏற்பதில்லை. கிறிஸ்தவம் மதமாற்றத்தின் அடிப்படையில் காதல் திருமணத்தை ஏற்கிறது. பம்பாய் படம் பார்த்திருப்பீர்கள்...கபீர் கமல் என்கிற அந்த இந்து-முஸ்லீம் தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைகளை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளும் என்கிறீர்களா...அல்லது அந்த திருமணத்தையாவது இஸ்லாம் ஏற்றுக்கொள்ளும் என்கிறீர்களா...பம்பாய் படத்துக்கு பின்னர் சந்திரலேகா, முஸ்தபா (பெயர் ஞாபகம் இல்லை நெப்போலியன் நடித்தது) என இருபடங்களீல் இந்து பெண்கள் முஸ்லீம்களை காதலிப்பது போல காட்டினார்கள் (அப்படித்தான் கேள்விபட்டேன்) ஆனால் பைப் வெடி வீசப்பட்டதென்னவோ மணிரத்தினம் வீட்டில்தான். சாய்ராபானு-சேகர் திருமணத்தை அவரது தந்தை ஏற்றுக்கொள்கிறார் என கொள்வோம் அவர் இஸ்லாமியர் ஆவாரா? ஆனால் தொடக்க காலம் முதல் இந்துக்கள் மாற்றுமதத்தவருடனான திருமணங்களை அங்கீகரிப்பதில் முன்னணியில் உள்ளனர் (இங்கும் எதிர்ப்புகள், அவமானங்கள் வேதனைகள் இல்லாமலில்லை) ஆனால் நான் ஒரு கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்து இந்துவாகவே வாழ முடியும். என் மகனோ மகளோ பாப்டிசமோ இன்னபிற மதச்சடங்குகளோ இல்லாமல் எல்லா ஆலயங்களுக்கும் செல்ல முடியும். சுருக்கமாக இந்து சமுதாயத்தில் மட்டுமே இந்த மத-கலப்பு மண காற்று வீசிட முடியும். மற்ற மார்க்கங்களில் காதல் கூட தூண்டில்தான்.

-o❢o-

b r e a k i n g   n e w s...