.

Wednesday, May 9, 2007

சந்தன மரக் கடத்தலில் திமுக அமைச்சரின் உறவினர்கள்: ஜெ. புகார்

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பகுதியில் சந்தன மரக் கடத்தலில், தி.மு.க. அமைச்சரின் உறவினர்கள் ஈடுபட்டு வருவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா புகார் கூறியுள்ளார்:

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பகுதியில் வசுவம்பாடி தனியார் எஸ்டேட்டுக்குச் சொந்தமான சந்தன மரக் கிடங்கு உள்ளது. இது சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட "ரிசீவரின்" (வழக்கறிஞர்) பொறுப்பில் உள்ளது. இந்தக் கிடங்கில் இருந்து கடந்த 10-ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் காவலாளியை தாக்கி விட்டு, ரூ.2.5 கோடி அளவுக்கு சந்தன மரக் கட்டைகளை கடத்த மூன்று பேர் முயன்று இருக்கிறார்கள். அவர்கள் 2 லாரிகளிலும், 3 சுமோ வாகனங்களிலும் வந்துள்ளனர். அவற்றில், 2 லாரிகளையும், 1 சுமோவையும் மட்டுமே வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சேலம் மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர் பாரப்பட்டி சுரேஷ் மற்றும் குட்டி ஆகியோர் 2 சுமோவில் இருந்துள்ளனர். இவர்கள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சகோதரர் கந்தசாமியின் மகன்கள் என்பது தெரிய வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரக் கட்டைகளை வனத் துறையினர் வசம் ஒப்படைத்து விட்டு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை தங்கள் வசம் ஒப்படைக்கும் படி, காவல் துறையினர் வனத் துறையினரிடம் கேட்டு இருக்கின்றனர். வனத்துறையின் சட்டப்படி பிடிபட்ட வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்தால், அந்த வாகனங்களை அரசே எடுத்துக் கொள்ளலாம் என்று உள்ளது.

ஆகவே, பிடிபட்ட வாகனங்களை வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கிக் கொண்டு காவல் துறையினர் மூலம் வழக்குப் பதிவு செய்தால், அந்த வாகனங்களை நீதிமன்றம் மூலம் மீண்டும் விடுவித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் காவல் துறைக்கு வழக்கை மாற்ற திமுகவினர் முயற்சித்து வருகின்றனர்.

குற்றவாளிகளைப் பிடித்து ஒரு நாள் ஆகியும், முதல் தகவல் அறிக்கை இதுவரை தயாரிக்கப்பட வில்லை. திமுக அரசின் மிரட்டலுக்குப் பயந்து, காவல் மற்றும் வனத் துறையினர் குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Dinamani

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...