.

Wednesday, May 9, 2007

ச: கருத்துக் கணிப்பு, தாக்குதல், கொலைகள் - விவாதம்

தமிழகத்தின் ஆளுங்கட்சியின் ஆளுமைகளாக திகழ்ந்த கருணாநிதியின் வாரிசுகளுக்குள் முன்னெப்போதும் இல்லாத அளவில் பகிரங்கமான மோதல் வெடித்திருக்கிறது. முதலாவதாக கருணாநிதியின் மனசாட்சி என்று வர்ணிக்கப் பட்ட முரசொலி மாறனின் புதல்வர்களின் எழுச்சியால் கருணாநிதியின் குடும்பத்துக்குள் ஏற்பட்ட சலசலப்பும் அதன் தொடர்ச்சியாக தயாநிதிமாறனை முன்னிலைப் படுத்தும் சன்டிவி, தினகரன் குழும ஊடகங்களின் செய்திகள், கருத்துக் கணிப்புகள், அடுத்து திமுக தலைவரின் மகன்களுக்குள் பிளவை உண்டாக்கும் விதமான இரண்டாவது கருத்துக் கணிப்பு இன்று பகிரங்கமான மோதலாக வெடித்து மூன்று உயிர்களைப் பலி கொண்டிருக்கிறது.

இதற்கு காரணமானவராக அழகிரியை நேரடியாக சுட்டி சன்டிவி கடுமையாக விமர்சித்திருக்கிறது. தா. கிருட்டிணன் கொலைவழக்கிலும் அழகிரியின் தொடர்பு குறித்து இன்று முதன்முறையாக சன்டிவி விமர்சித்தது.

ஸ்டாலின் அழகிரியை விட செல்வாக்கு உள்ளவர் என்ற கணிப்புக்கான எதிர்ப்பாக தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப் பட்டுள்ள தாக்குதல் விளைவித்துள்ள சூழல் ஒரு புறம் இப்போது அத்தகைய ஒரு கருத்துக் கணிப்புக்கான அவசியம் என்ன என்பது ஒரு புறம் இதன் பின்விளைவுகளை எதிர்கொள்ளும் ஊடகத்தன்மை மறுபுறம் என நம் முன் கேள்விகள் பல நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இது பற்றி ஒரு அரசியல் அலசல், பொதுவிவாதத்தை முன்வைக்கிறோம்.

இன்றைய அரசியல் நிகழ்வுகள் தமிழக அரசியலில் நிகழ்த்தப் போகும் தாக்கங்கள் என்னென்ன? இந்த நிகழ்வுகளின் பின்னணி என்ன? இது அரசியல்ரீதியாக திமுகவுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? இவை பற்றி விவாதிக்கலாம் வாருங்கள். உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

(விவாதத்தை திசை திருப்பும் விதமான கருத்துகள் வெளியிடப் படமாட்டாது.)

28 comments:

சிறில் அலெக்ஸ் said...

கருணாநிதிக்கான விழாக் கொண்டாட்டங்களுக்கு முன்பாக இப்படி நடந்திருப்பது இன்னுமொரு பின்னடைவு.

விழா நடந்தாலும் சிறப்பாக அமையாது என்றே தோன்றுகிறது.

சன் டி.வி/தினகரன்ன் கருத்துக்கணிப்புகளுக்கு உள்ளிருந்தே பிரச்சனை கிளம்பும் என எதிர்பார்த்திருப்பார்களா தெரியவில்லை.

என்னைக்கேட்டால் மக்கள் கனிமொழியைத் தேர்ந்திருக்கலாம்

அவரும் வாரிசுதானே?
:)

We The People said...

என் பயம் என்னவென்றால் இன்று கருணாநிதி உள்ள போதே இப்படி அடித்துக் கொள்ளும் இவர்கள், அவருக்கு பின்னால் என்ன செய்வார்கள்?? கருணாநிதி கட்சிக்கு தன் வாரிசு யார் என்று அதற்கு முன்பாக சொல்லிவிட்டுப்போனால் நம்ம தப்பித்தோம்! இல்லை நாளை இன்று இறந்த மூன்று பேர் மாதிரி நாளை எவ்வளவு பேர் இறப்பார்களோ! அட சாமீ! பதவி வெறி தலைக்கு மேல போனா இப்படித்தான் போல! அமைதி படை சத்தியராஜ் மாதிரி, போட்டின்னு வந்திட்டா நாய் என்ன மனுஷன் என்ன, ஏறி மிதிச்சிட்டு போகவேண்டியது தான் என்ற நிலையில், உயிரை காவு வாங்கியுள்ளது வருத்ததை வரவைக்கிறது! இதற்கு தீர்வு கருணாநிதி கையில் மட்டும் தான் உள்ளது!

இது என் கருத்து!

ஜோ/Joe said...

அழகிரி என்னும் இந்த நபர் எந்த தகுதியுமில்லாத ,ரவுடி ராஜ்யம் பண்ணத் தெரிந்த ஒரு மூன்றாம் தர நபர் .கலைஞரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக கலைஞர் இவருக்கு அளவுக்கு மீறி இடம் கொடுத்ததன் பலனை இன்று அனுபவிக்கிறார் .உட்கட்சி விஷ்யத்துக்காக பொதுச்சொத்தை நாசப்படுத்தி ,4 அப்பாவிகளின் உயிர்களை குடித்து விட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் பேட்டி கொடுக்கும் இத்தைகைய நபர்களையெல்லாம் வைத்துக்கொண்டு திமுக உருப்பட்ட மாதிரி தான். :((

சிறில் அலெக்ஸ் said...

//4 அப்பாவிகளின் உயிர்களை குடித்து விட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் பேட்டி கொடுக்கும் இத்தைகைய நபர்களையெல்லாம் //

சரியாகச் சொன்னீங்க ஜோ

//கருணாநிதி கட்சிக்கு தன் வாரிசு யார் என்று அதற்கு முன்பாக சொல்லிவிட்டுப்போனால் நம்ம தப்பித்தோம்! //

தி.மு.க ஒரு ஜனநாயகக் கட்சி இதில் வாரிசு அரசியலுக்கே இடமில்லை - கருணாநிதி

Boston Bala said...

அதிமுக குறித்து கணிப்பு வெளியானவுடன் இப்படி எதுவும் நிகழவில்லை என்பதால் 'கட்டுக்கோப்பான அதிமுக-வும் கருங்காலிக் கூடமான திமுக-வும்' என்று ரைமிங்காக சொல்லலாமா :P

Anonymous said...

Stalin deserved to take over . I dont know why SUN NETWORK taken this survey and timing of survey ?
Maran should concentrate Central and become like Murasoli Maran .

MK should expel Madurai Mayor and co from Party and expect some kind of base of opinion poll from SUN NETWORK . Declare Stalin as CM and take over party position to control Alzhakiri . So DMK can not be divided after him . Make Alzhakiri accountable for south .

Note :
We wont want to repeat JJ-JMGR drama . hey now all JJ supporters in that period are in DMK and supporters of Stalin . what a co -incident .

Anonymous said...

//தி.மு.க ஒரு ஜனநாயகக் கட்சி இதில் வாரிசு அரசியலுக்கே இடமில்லை - கருணாநிதி //

இவர் என்னப்பா நடுவுல காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு

Anonymous said...

எனக்கு ஒரு சந்தேகம். அழகிரியின் ஆதரவாளர்களுக்கு கோபம் வந்தது அழகிரி ஸ்டாலினிக்கு கீழ் வந்ததாலா இல்லை தயாநிதி மாறனுக்கு கீழ் வந்ததாலா?

We The People said...

//தி.மு.க ஒரு ஜனநாயகக் கட்சி இதில் வாரிசு அரசியலுக்கே இடமில்லை - கருணாநிதி//

அடப்பவமே! அப்ப நம்ம நிலை அதோ கதி தான் போல! இதைவிட பெரிய வெறியாட்டம் அவர் காலத்துக்கு பின் நடக்கும் என்பது தின்னம் :(((

எத்தனை உயிர்கள் குடிக்கபோகுது இந்த தி.மு.கவின் ஜனநாயக கொள்கை?? சொல்லறது எல்லா நல்லா சொல்லறாரு! ஆனா பார்த்த ஜனநாயக ஆட்சி மாதிரி தெரியலையே! அரசாட்சி மாதிரியும், இரண்டு, மூன்று ராஜகுமாரர்கள் ஆட்சியை புடிக்க போவது யார்ன்னு பெரிய வீயூகம் நடத்தறமாதிரி தெரியும். ஒன்னும் புரியல சாமீ!

//4 அப்பாவிகளின் உயிர்களை குடித்து விட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் பேட்டி கொடுக்கும் இத்தைகைய நபர்களையெல்லாம் //

அதுக்கு மேல சொல்ல (ஆட்டோ,சுமோ வரும்ன்னு) பயப்படறாரு போல ஜோ ;)

//அதிமுக குறித்து கணிப்பு வெளியானவுடன் இப்படி எதுவும் நிகழவில்லை என்பதால் 'கட்டுக்கோப்பான அதிமுக-வும் கருங்காலிக் கூடமான திமுக-வும்' என்று ரைமிங்காக சொல்லலாமா :P//

அட பாலா வேற கொளுத்தி போடறாரு! அட சாமீ இன்னைக்கு ஒரு முடிவோட தான் கிளம்பியிருக்கீங்க போல!!!

✪சிந்தாநதி said...

//அதிமுக குறித்து கணிப்பு வெளியானவுடன் இப்படி எதுவும் நிகழவில்லை என்பதால் 'கட்டுக்கோப்பான அதிமுக-வும் கருங்காலிக் கூடமான திமுக-வும்' என்று ரைமிங்காக சொல்லலாமா :P//

அதிமுகவில் ஜெயல்லிதாவுக்கு செல்வாக்கா ச்சிகலாவுக்கு செல்வாக்கா என்று கருத்து கணிப்பு நடந்தால் தெரியும் ;)

இல்லை என்றால் ஜெயல்லிதாவுக்குப் பின் யார்? சசிகலாவா, பன்னீர்செல்வமா என்று கணிப்பு வைத்து பன்னீர் செல்வம் முந்திக் கொண்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் பன்னீரின் தலை இருக்காது.

மணிகண்டன் said...

//அதிமுக குறித்து கணிப்பு வெளியானவுடன் இப்படி எதுவும் நிகழவில்லை என்பதால் 'கட்டுக்கோப்பான அதிமுக-வும் கருங்காலிக் கூடமான திமுக-வும்' என்று ரைமிங்காக சொல்லலாமா :P

//

பாஸ்டனுக்கெல்லாம் ஆட்டோ அனுப்ப முடியாதுங்கற தைரியமா பாபா? ஃப்ளைட் வரும் ஜாக்கிரதை :)

ஜோ/Joe said...

We the People,
நீங்க நல்லா காமெடி பண்ணுறீங்க .நான் ஒத்துக்கிறேன் .

Boston Bala said...

'ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவை தலைமை தாங்க கொடுத்துள்ள பட்டியலில் என் பெயரை விட்டுவிட்டார்கள்' - மக்கள் டிவியில் விஜய்காந்த் வருத்தம்

'பாமக-வில் அடுத்த வாரிசு யார்' என்று தினகரன் ஏன் சர்வே எடுக்கவில்லை? - ஜெயா டிவியில் முன்னாள் பா.ம.க. விஐபி பேராசிரியர் தீரன்

'சிவாஜி வெளியாகும் சமயத்தில் 'அடுத்த வாரிசை' நினைவூட்டுவது ரஜினியை தன் பக்கம் இழுக்கும் சூழ்ச்சியா!' - விஜய் டிவியின் 'நீயா நானா' தலைப்பு

மணிகண்டன் said...

//இல்லை என்றால் ஜெயல்லிதாவுக்குப் பின் யார்? சசிகலாவா, பன்னீர்செல்வமா என்று கணிப்பு வைத்து பன்னீர் செல்வம் முந்திக் கொண்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் பன்னீரின் தலை இருக்காது.
//

பன்னீர்செல்வம் மேல உங்களுக்கு என்ன கோபங்க சிந்தாநதி :). அவர்பாட்டுக்கு அம்மா கால்ல விழுந்தோமோ காரியத்தை சாதிச்சோமான்னு இருக்காரு. இப்படி கொளுத்தி போடுறீங்களே ?

Boston Bala said...

---ஜெயல்லிதாவுக்குப் பின் யார்? சசிகலாவா, பன்னீர்செல்வமா என்று கணிப்பு வைத்து பன்னீர் செல்வம் முந்திக் கொண்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.---

பார்த்தீங்களா...: ஆராய்ச்சி மணி: தினகரன் சர்வே: யோக்கியன் வர்றான்

✪சிந்தாநதி said...

அட ஆமா...அப்ப பாபா உங்க வாக்கு பொன்வாக்கு (பொன்மொழி)

மணிகண்டன் said...

ஸ்டாலின், அழகிரியை மையமா வச்சு மணிரத்னம் அக்னிநட்சத்திரம்-2 எடுக்கப் போறாராமே ?உண்மையா?

Boston Bala said...

புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலை. சன் டிவியின் கம்ப்யூட்டர் பிரிவில் பணி. 30 வயது, 25 வயது. இந்த இருவரின் பெற்றோர் (மனைவி, குழந்தை உள்ளனரா என்று தெரியவில்லை) நிலை பரிதாபகரமானது. கடைநிலை சிப்பந்திகளான காவலாளி மற்றும் பார்சல் பிரிவில் ஊழியரின் நிலை அதனினும் துயரம் மிகுந்தது :(

தீவிரவாதம், பயங்கரவாதம் என்கிறேன். அழகிரியா மாறனா ஸ்டாலினா என்பதுதான் விஞ்சி எல்லாவிடத்திலும் பரபரப்பு.

'காயமடைந்தவர்கள்' என்று அறிவிக்கப்படுபவர்கள், இறந்தவர்களைவிட பாவம். உடல் உபாதைகளினால் வேலை நிலைக்காது. தீப்புண்கள் ஆறுவதற்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்ய இயலாத பொருளாதாரம். அதனால் நிகழும் தோற்ற மாற்றங்களுக்கு உளவியல் நிபுணரையும் அணுக முடியாத நிலை. செத்துப் போனவர்களுக்கு இடும் இரண்டு லட்சம் நஷ்ட ஈடு கூட கிடைக்காது.

Boston Bala said...

---அடுத்த நாள் பன்னீரின் தலை இருக்காது.---

சிந்தா... இது நடந்தால் 'வருங்காலம் அறிய என் பதிவுக்கு வரவும்' என்று போர்டு போட்டுக் கொள்ளலாம் :)

Anonymous said...

கழகத்திற்காக உண்மையாக உழைக்கும் எவருக்கும் இந்த கதிதான் என்பது கழகத்தின் இரத்த வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும்.

Alagiri is the true heir to MK. He is sacrificing his life to DMK & South Tamil Nadu with out expecting any returns or posts. He should be given proper respect.

பினாத்தல் சுரேஷ் said...

என்னப்பா இங்கே தீர்க்கதரிசனம் பத்தி பேச்சு அடிபடுது!

இந்திய நேரப்படி மதியம் மூன்று மணிக்கு ஞானமுனி சுரேஷ் பதிவின் கடைசி வரி:

இன்றிரவு அல்லது நாளை சன் டிவியில் நான் எதிர்பார்க்கும் செய்தி -- தா
கிருட்டிணன் கொலைவழக்கு -- ஒரு மீள்பார்வை ;-)

செய்திகள் நடந்தவுடன் தெரிய சற்றுமுன், நடக்குமுன்னே தெரிய பினாத்தல்கள் படியுங்கள் ;-)

மறந்துவிட்டேனே.. 1000த்துக்கு வாழ்த்துக்கள். சாதா சாதனை இல்லை இது.

Anonymous said...

DMK, causing large-scale violence at Madurai. The police has become inactive'
தனது கட்சிக்காரர்களையே காப்பாற்ற இயலாத அரசால் பொதுமக்களை எப்படிக் காப்பாற்ற இயலும்?

மிகச் சரியான கேள்வி.. அராஜக கும்பல் ஆண்டால் வேறு என்னத்தை எதிர் பார்க்க முடியும்? குற்றம் செய்தால் காஞ்சி சங்கராச்சாரியார் என்ன சொந்த மகன் என்ன? சட்டம் ஒழுங்குக்கு பாதகமாக இருப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

இந்த அரசை Dismiss செய்ய வேண்டியது கட்டாயம்.

Boston Bala said...

---செய்திகள் நடந்தவுடன் தெரிய சற்றுமுன், நடக்குமுன்னே தெரிய பினாத்தல்கள் படியுங்கள்---

செய்திகளை நடக்க வைக்க என்ன பேப்பரை படிக்கணும் ;)

Anonymous said...

பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர் பேர் சொல்லி வாழ்வதில்லை.

புள்ளிராஜா

சிறில் அலெக்ஸ் said...

//சாதா சாதனை இல்லை இது.//
ஸ்பெஷல் சாதாவா?

:))

வாழ்த்துக்கு நன்றி சுரேஷ்.

Anonymous said...

//இன்றைய அரசியல் நிகழ்வுகள் தமிழக அரசியலில் நிகழ்த்தப் போகும் தாக்கங்கள் என்னென்ன? இந்த நிகழ்வுகளின் பின்னணி என்ன? இது அரசியல்ரீதியாக திமுகவுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? இவை பற்றி விவாதிக்கலாம் வாருங்கள். உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

(விவாதத்தை திசை திருப்பும் விதமான கருத்துகள் வெளியிடப் படமாட்டாது//

மூன்று உயிர்கள் பலியான பின்பும் நம்மளாலால் இனி அடுத்து நாற்காலிக்கு வருவது யார் என்றே விவாதம் செய்ய முன்வருகிறோம்,,,



யார் செத்தால் என்ன.. நாற்காலி முக்கியம் ..

✪சிந்தாநதி said...

//மூன்று உயிர்கள் பலியான பின்பும் நம்மளாலால் இனி அடுத்து நாற்காலிக்கு வருவது யார் என்றே விவாதம் செய்ய முன்வருகிறோம்,//

மூன்று உயிர்கள் அரசியல் பதவிப் போட்டியினால் தான் பலியாக்கப் பட்டுள்ளன. இந்த அரசியல் கொடுமைக்கு காரணம் மற்றும் இதன் நோக்கம் மற்றும் பின்விளைவுகள் பற்றியே இந்த விவாதம் உருவானது. கொலை பற்றியா விவாதிக்க முடியும்? அப்படிச் செய்தால் அது அதைவிட கொடுமையாக இருக்கும்.

Anonymous said...

\\இன்றிரவு அல்லது நாளை சன் டிவியில் நான் எதிர்பார்க்கும் செய்தி -- தா
கிருட்டிணன் கொலைவழக்கு -- ஒரு மீள்பார்வை ;-)\\

தமிழக மீனவர்கள் கொலையில் எல்.டி.டி.ஈ தொடர்பு- திடுக்கிடும் தகவல்.....
தமிழ்நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாதென்றே எல்.டி.டி.ஈ தொடர்பு பற்றி தெரிவிக்க வேண்டி வந்தது - சட்டசபையில் முதல்வர்.......
ஜெலிக்னைற் குச்சி வெடித்து பலர் சாவு - விபத்தா திட்டமிட்ட சதியா?.....
நாட்டை காட்டிக்கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை- முதல்வர் காட்டம்..

இப்படி பல எதிர் பார்க்கலாம்....

-o❢o-

b r e a k i n g   n e w s...