.

Wednesday, May 9, 2007

ச:'அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும்' - ஜெயலலிதா

சட்ட ஒழுங்கை காக்கத் தவறியதாற்காக தி.மு.க அரசு கலைக்கப்படவேண்டும் என ஜெயலலிதா அறிக்கைவிட்டுள்ளார். மதுரையில் நடந்த தினகரன் அலுவலகத் தாக்குதலின்போது போலீஸ் பாராமுகமாயிருந்ததைக் கண்டித்த அவர் கருணாநிதி குடும்பத்தில் பதவிக்காக சண்டை நடக்கிறது எனக் குறிப்பிட்டார்.

'தினகரன் எல்லாக் கட்சிகளுக்கும் பிரச்சனையை உருவாக்கிவருகிறது. முதலில் அதிமுகவிற்கு அடுத்த வாரிசு யார் என குழப்பத்தை உருவாக்கியது அதை நாங்கள் கண்டுகொள்ளவில்லை அதன்பின் பாமகவிற்கும் இப்போது திமுகவிற்கும் பிரச்சனையை உண்டுபண்ணியிருக்கிறது. தனது கட்சிக்காரர்களையே காப்பாற்ற இயலாத அரசால் பொதுமக்களை எப்படிக் காப்பாற்ற இயலும்?' என்றிருக்கிறார் ஜெயலலிதா.

Dinakaran attack: Jayalalithaa demands dismissal of Govt.

கருத்துக்களை விவாதப் பதிவில் தெரிவியுங்கள்

6 comments:

Anonymous said...

DMK, causing large-scale violence at Madurai. The police has become inactive'
தனது கட்சிக்காரர்களையே காப்பாற்ற இயலாத அரசால் பொதுமக்களை எப்படிக் காப்பாற்ற இயலும்?

மிகச் சரியான கேள்வி.. அராஜக கும்பல் ஆண்டால் வேறு என்னத்தை எதிர் பார்க்க முடியும்? குற்றம் செய்தால் காஞ்சி சங்கராச்சாரியார் என்ன சொந்த மகன் என்ன? சட்டம் ஒழுங்குக்கு பாதகமாக இருப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

இந்த அரசை Dismiss செய்ய வேண்டியது கட்டாயம்.

Anonymous said...

தம்பி ராஜ்! நீ என்ன ஸ்கூல் பையனா? அம்மா ஆட்சியில 3 மாணவிகள் எரித்துக் கொண்டாங்களே, எங்கப்பா போயிருந்தாய்? அ.தி.மு.க ஆட்சியைக் கலைக்க முடிஞ்சுதா? கம் என்னு இரு.

புள்ளிராஜா

Anonymous said...

தம்பி ராஜ்! நீ என்ன ஸ்கூல் பையனா? அம்மா ஆட்சியில 3 மாணவிகள் எரித்துக் கொண்டாங்களே, எங்கப்பா போயிருந்தாய்? அ.தி.மு.க ஆட்சியைக் கலைக்க முடிஞ்சுதா? கம் என்னு இரு.

புள்ளிராஜா

Anonymous said...

கன்னித்தாய்!! செல்வி ஜெயலலிதா ஆடாத ஆட்டமா.

இவங்க ஏதோ நல்லாட்சி நடத்தின மாதிரி. கும்பகோணத்தில இவங்க குளிக்க போன ஒரு சம்பவமே போதும்.... இவங்க லட்சணம் தெரியும்.

இதற்காக அழகிரி செய்தது சரி கிடையாது. சுத்தமான ரவுடித்தனம். எல்லாம் ஒரே சாக்கடை கூட்டம்.

Anonymous said...

புள்ளிராஜா, காஞ்சி சங்கராச்சாரியார் பெயரை குறிப்பிட்ட காரணம் அவர் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய்வராக இருந்தாலும், அவரை சட்டத்தின் முன் ஜெயலலிதா நிறுத்தியதற்காக அல்ல.

காஞ்சி சங்கராச்சாரியார் கைதின் போது திமுகவினரும் திகவினரும் எல்லோருக்கும் சட்டம் பொது என்று பேசியதனால்.

அந்த சட்டம் முதலமைச்சர் மகனாக இருந்தாலும் முதலமைச்சர் பேரனாக இருந்தாலும் ஒன்றுதான்

அது மாடாக இருந்தாலும் மகனாக இருந்தாலும் நீதி ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.

Anonymous said...

என்ன 3 பேர்கள் சாவுக்கே இப்படி கத்துகிறார்கள் தமிழக தமிழர்கள்?

எங்கள் நாட்டில் ஒருவர் எத்தனை கொலைகளை செய்கிறார் என்பதை வைத்துத்தான் அவருக்கு தலைவர் பதவியே.

மிக அதிகமான கொலைகளை செய்பவருக்கு தேசத்தலைவர் பதவி தருவோம்..

-o❢o-

b r e a k i n g   n e w s...