.

Tuesday, July 17, 2007

மதுரைக்கு 286 கோடியில் புதிய இரு திட்டங்கள்

ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புதுப்பித்தல் திட்டத்தின் மாநில அளவிலாக 4-வது ஒப்பளிப்பு கூட்டம் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரூ.286 கோடி மதிப்பிலான 2 திட்டங்கள் மத்திய அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.

மதுரையில் பாதாளச் சாக் கடைத்திட்டம் தேசிய நதிநீர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 50 வார்டுகளுக்கு முழு மையாகவும், 22 வார்டு களுக்கு பகுதியாகவும் நிறை வேற்றப்படுகிறது. மேற்படி திட்டத்தில் விடுபட்டுள்ள 22 வார்டுகளுக்கு முழுமையாக பாதாள சாக்கடை திட்டம் அமைக்கவும், நவீன முறையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக் கவும், மற்றும் பழைய திட்டத்தை மேம்படுத்தவும் ரூ.231.01 கோடிக்கு செயல் படுத்தவும் திட்டம் பரிந்துரைக்கப்பட்டது.

மதுரை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்திய காய்கறி அங்காடியை மாட்டு தாவணி பஸ் நிலையம் அருகில் நவீன முறையில் அமைக்க ரூ.55 கோடியில் செயல்படுத்த உள்ள திட்டத்தை பரிந்துரை செய்துள்ளது.

கூட்டத்தில் நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறையின் அரசு செயலாளர் தீனபந்து, டுபிட்கோ நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கௌரிசங்கர், திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் சமீர் வியாஸ், வீட்டு வசதி துறை செயலாளர் செல்லமுத்து.நகராட்சி நிர்வாக ஆணை யர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நன்றி: மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...