.

Tuesday, July 17, 2007

சுயநிதி கல்லூரிகளுக்கு கருணாநிதி எச்சரிக்கை.

தோழமைக்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்து முடிந்தவற்றுக்கு விளக்கமும், ஏற்கத்தக்க கருத்துகளை ஏற்றுக்கொண்டும் செயல்படுவதாக முதலமைச்சர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.
இடதுசாரி மார்க்சிஸ்ட் தலைவர் வரதராசனுக்கு பதிலளிக்கும் முகமாக அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் சுயநிதி கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இக்குற்றச்சாட்டை நிவர்த்திக்க, அரசே அதிக அளவில் பொறியியல் கல்லூரிகளை வரும் கல்வியாண்டிலிருந்து தொடங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய முழுமையான அறிக்கையை மாலைமலர் வெளியிட்டுள்ளது.

8 comments:

நாமக்கல் சிபி said...

//மேலும் சுயநிதி கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இக்குற்றச்சாட்டை நிவர்த்திக்க, அரசே அதிக அளவில் பொறியியல் கல்லூரிகளை வரும் கல்வியாண்டிலிருந்து தொடங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்//

கலைஞர் அவர்களுக்கு ஒரு சபாஷ்!

நாமக்கல் சிபி said...

இனி ஆட்டோமேடிக்கா சுயநிதிக் கல்லூரிகளின் நன்கொடை வசூல் குறையும்!

தகுதியும் ஆர்வமும் உள்ளா மாணவர்களுக்கும் சமமான, தரமான மேற்கல்வி கொடுக்க முனைந்தால் அது பல நுற்றாண்டு வரலாற்றில் சாதனையாக இடம்பிடிக்கும்!

சின்னப் பையன் said...

எனக்கு சில கேள்விகள்:
1. திடீரென்று அடுத்த ஆண்டில் பல கல்லூரிகளை திறக்க முடியுமா?
2. தேவையான கட்டிடங்கள், ஆசிரியர்கள், இன்ன பிற... இவைகள் தயாராக உள்ளனவா?
3. எல்லாம் தயாராகவே உள்ளன எனில், இதுவரை ஏன் அவைகளை உபயோகப்படுத்தவில்லை?
4. அல்லது இது கப்பம் கொடுக்காதவர்களுக்கு, மிரட்டலா?

சிவபாலன் said...

பாபா

ஒரே பதில்..

அடுத்த வருடம் தானே.. அதற்குள் எத்தனை எத்தனை மாற்றங்களோ..!!!???

Anonymous said...

arikkai dhaane! kaasa panamaa?

வாசகன் said...

அறிக்கை என்றாலும் அரசு மனது வைத்தால் இயலாத ஒன்றல்ல..!

பிற கட்சியினரை எதிரிகளாகப் பார்க்காமல் அவர்தம் கருத்துகளை 'ஆலோசனை'யாக ஏற்றுக்கொள்ளும் (அ)அவ்வாறு காட்டிக்கொள்வதற்காகவேனும் பாராட்டமுடிகிறது தான், கடந்த காலம் ஞாபகம் வரும் போது.

Anonymous said...

தனியார் பொறியியல் கல்லூரிகளை அரசே எடுத்துக்கொள்ளும்
என்று ஜெயலலிதா ஒரு அறிக்கை விட்டது யாருக்காவது
நியாபகம் இருக்கா? இந்த அறிக்கையும் அதே குப்பை தொட்டிக்கு
போகும்.

Anonymous said...

//பிற கட்சியினரை எதிரிகளாகப் பார்க்காமல் அவர்தம் கருத்துகளை 'ஆலோசனை'யாக ஏற்றுக்கொள்ளும் (அ)அவ்வாறு காட்டிக்கொள்வதற்காகவேனும் பாராட்டமுடிகிறது தான், //

If remember the past, now others' support is needed to run the show

-o❢o-

b r e a k i n g   n e w s...