மறைமலைநகர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளியில் மாணவிகள் இரட்டை ஜடை பின்னல் போட்டுக் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் மாணவி சுலோசனா(14) என்பவர் சமீபத்தில் ஒரு நாள் ஒரு ஜடை பின்னல் போட்டு வந்துள்ளார்.
இதைப் பார்த்ததும் ஆத்திரம் அடைந்த ஆசிரியை ஷகீலா, மாணவி சுலோசனாவின் முன் தலை முடியை பிளேடால் வெட்டி வீசினார். இது பற்றி சுலோசனா பெற்றோரிடம் கூறி அழுதார்.
இதையடுத்து சுலோசனா ஆசிரியை ஷகீலா மீது மறை மலைநகர் போலீசில் புகார் கூறினார். இதனால் மாணவி தலைமுடி வெட்டப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இதை தொடர்ந்து மாவட்ட கல்வி முதன்மை அதிகாரி ராமானுஜம் அரசு பள்ளிக்கு விரைந்து வந்து தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், மாணவி சுலோசனா, ஆசிரியை ஷகீலா, சங்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
தகவல் அறிந்த செங்கல்பட்டு எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறு முகம், திருப்பேரூர்எம்.எல்.ஏ. மூர்த்தி, மறைமலைநகர் நகராட்சி தலைவர் சசிகலா மற்றும் மனித உரிமை அமைப் புகள் பள்ளிக்கு வந்து விசா ரணை நடத்தினார்கள். மறை மலை நகர் போலீஸ் இன்ஸ் பெக்டர் மோகனும், விசா ரணை நடத்தினார்.
விசாரணையின் போது மாணவி சுலோசனா கூறும் போது:-
நான் பள்ளிக்கு எப் போதுமே இரட்டை ஜடை தான் போட்டு வருவேன். அன்று மட்டும் தான் ஒற்றை ஜடை போட்டு இருந்தேன். இதைப் பார்த்ததும் கோபம் அடைந்த ஆசிரியை ஷகிலா என்னை திட்டினார்.பின்னர் பிளேடால் தலைமுடியை வெட்டினார்.
சிறிது நேரம் கழித்து "நானே எனது தலைமுடியை வெட்டிக் கொண்டதாக என்னிடம் எழுதி வாங்கிக் கொண்டார்'' என்றார்.
ஆசிரியை ஷகிலா கூறும் போது, சம்பவத்தன்று நான் அந்த மாணவியைப் பார்க்க வில்லை. மாணவியின் முடி யையும் வெட்டவில்லை. சுலோசனா என் மீது வீண்பழி சுமத்துகிறார்'' என்றார்.
இந்த நிலையில் மாவட்ட முதன்மை அதிகாரி ராமானுஜம் இன்று கூறியதாவது:-
மாணவி சுலோசனாவின் முடியை வெட்டிய ஆசிரியை ஷகீலா பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்பட்டவர். அவரை அக்கழகமானது "டிஸ்மிஸ்'' செய்துள்ளது.
அதே போல இந்த விவ காரத்தில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் ராஜேந்திரனை ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுலம் அரசினர் மேல் நிலைப் பள்ளிக்கு இட மாற்றம் செய்துள்ளோம். இதற்கான கடிதம் நேற்று இரவே அவரிடம் வழங்கப்பட்டு
விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்
Tuesday, July 17, 2007
மாணவியின் முடியை வெட்டிய ஆசிரியை வேலை இழந்தார்
Posted by வாசகன் at 8:27 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment