.

Tuesday, July 17, 2007

மேற்குவங்கம்: பேய் பயத்தால் பள்ளிக்கு விடுமுறை.

மேற்குவங்காள மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள குசுமாகரம் என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளிக்கூடம் உள்ளது.

இங்கு பேய் நடமாட்டம் இருப்பதாக வதந்தி நிலவி வந்தது. இந்த நிலையில் மாணவிகள் சிலர் திடீர், திடீரென மயங்கி விழுந்தனர். பேய் பிடித்து விட்டதால் தான் அவர்கள் மயங்கி விழுந்துவிட்டதாக பீதி ஏற்பட்டது.

இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து விட்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஷேக் அப்துல் ரஷீத் பெற்றோர்களை அழைத்துப் பேசி பார்த்தார். இதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் பள்ளிக்கூடத்துக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவித்து விட்டார்.

இப்போது சமூக அமைப்பினர் இதில் தலையிட்டு பெற்றோர்களை அழைத்து பேசி வருகின்றனர். பேய் இருக்கிறது என்பது மூட நம்பிக்கை. விஞ்ஞானப்பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அமைதிபடுத்தினார்கள்.

மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்தனர். மயங்கி விழுந்த மாணவிகள் மனநிலை பாதிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...