.

Tuesday, August 7, 2007

தொகுதி சீரமைப்பு பட்டியல் திருவள்ளூர்-காஞ்சீபுரம் புதிய எம்.பி.தொகுதி - 11 தொகுதிகள் பெயர் மாற்றம்

மக்கள் தொகை அடிப் படையில் நாடு முழுவதும் பாராளுமன்ற, சட்டசபை தொகுதிகளை மாற்றியமைக்கும் பணி கடந்த 1 வருடமாக நடந்தது. தேர்தல் கமிஷன் நியமித்துள்ள தொகுதி சீரமைப்பு ஆணையம் இதற்கான பணிகளை மேற்கொண்டது.

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை எண்ணிக்கை 6 கோடியே 24 லட்சத்து 5 ஆயி ரத்து 679 பேர் உள்ளனர். ஒரு தொகுதிக்கு 2 லட்சத்து 66 ஆயிரத்து 691பேர் என்ற அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகள் மற்றும் 39 பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்ற மும் இல்லை.

மாற்றாக உருவாகும் எம்.பி. தொகுதி களின் பெயர்களும், அதில் அடங்கி உள்ள எம்.எல்.ஏ. தொகுதிகளும் வருமாறு:

1. காஞ்சீபுரம் (தனி)
செங்கல்பட்டு, திருப் போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திர மேரூர், காஞ்சீபுரம்.

2. திருவண்ணாமலை
ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம் (பழங்குடி தொகுதி).

3. திருவள்ளூர் (தனி)
கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவாலங்காடு (தனி), திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர்.

4. ஆரணி
போளூர், ஆரணி, செய் யாறு, வந்தவாசி (தனி), செஞ்சி, மயிலம்.

5. விழுப்புரம் (தனி)
திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, முகையூர், ரிஷிவந்தியம்.

6. கள்ளக்குறிச்சி (தனி)
சின்னசேலம், கள்ளக்குறிச்சி (தனி) கங்காவள்ளி (தனி), ஆத்தூர், வாழப்பாடி (தனி), திட்டக்குடி (தனி).

7. நாமக்கல்
வீரபாண்டி, ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி- பழங்குடி), நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு.

8. ஈரோடு
குமாரபாளையம், ஈரோடு (கிழக்கு), ஈரோடு (மேற்கு), மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம்.

9. தேனி
சமயநல்லூர் (தனி), உசி லம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரிய குளம் (தனி), போடி நாயக்கனூர், கம்பம்.

10. தூத்துக்குடி
விளாத்திக்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி.

11. கன்னியாகுமரி
கன்னியாகுமரி, நாகர் கோவில், குளச்சல், திருவட் டாறு, விளவங்கோடு, கிள்ளியூர்.

நீக்கப்பட்ட பெயர்
11 தொகுதி புதிய பெயர்களு டன் உருவாக்கப்பட்டுள்ளதால் நீக்கப்பட்ட தொகுதி பெயர்கள் வருமாறு:

1. செங்கல்பட்டு
2. திருப்பத்தூர்
3. வந்தவாசி
4. திண்டிவனம்
5. ராசிபுரம்
6. திருச்செங்கோடு
7. பழனி
8. பெரியகுளம்
9. மயிலாடுதுறை
10. திருச்செந்தூர்
11. நாகர்கோவில்

மாலைமலர்

3 comments:

இலவசக்கொத்தனார் said...

இது கொஞ்சம் புரியலை. எங்க ஊர் வந்து சேரன்மாதேவி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது. இவ்வளவு நாளா திருச்செந்தூர் பாராளுமன்றத் தொகுதியில் வரும். இப்பொழுது இத்தொகுதியே நீக்கப் பெறுவதால் எந்த தொகுதியின் கீழ் வரும்?

எம்.பி தொகுதி, எம் எல் ஏ தொகுதி என்று எழுதாமல் பாராளுமன்றத் தொகுதி சட்டமன்றத் தொகுதி என்றே எழுதலாமே.

Boston Bala said...

இந்தப் பதிவில் விடை இருக்கிறதா என்று சொல்லுங்க... தேடியதில் இதுதான் கிடைத்தது.

---எம்.பி தொகுதி, எம் எல் ஏ தொகுதி என்று எழுதாமல்---

நன்றி... கொஞ்சம் சோம்பேறித்தனம் :)

Anonymous said...

Hey is this TAMIL I see before me ...?
I seem to think it is!!
Wow!
Guess how I found you?
When I was logging out, it said "blogs updated at xxx time" - and there you were ...
I have been to Tamil Nadu - Chennai and that famous stonecutters' village Mammallapuram - do you know it?
Sorry about the vulgar old English. I hope you can follow all this...
Come to my blog sometime! You are most welcome.
I'm at http://gledwood2.blogspot.com - drop by any time you like. Do say hi when you come!
See you there soon hopefully
all the best

from

Gledwood
"vol 2" ...

-o❢o-

b r e a k i n g   n e w s...