.

Monday, August 27, 2007

ஜெர்மானிய பெண்ணுக்கு 53 லட்சம் நஷ்டஈடு

11 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் கையை இழந்த ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணுக்கு ரூ.53 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டை சேர்ந்த குந்தா நீயுபர் (Gunda Neubauer) ,53 என்ற பெண் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். பஸ்ஸில் அவர், உதய்பூரில் இருந்து மவுண்ட் அபுவிற்கு சென்ற போது பஸ் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் நீயுபர் தனது வலது கையை இழந்தார்.

இதனால் அவர் ஜெர்மனியில் பார்த்து வந்த வேலையை இழக்க நேரிட்டது. இதனையடுத்து ரூ.11.67 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டுமென கோரி தில்லியில் உள்ள ஜெர்மன் துதரகத்தின் மூலம் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடுத்தார்.

இதற்கான நஷ்டஈடு தொகையை வழங்குவதற்கு பஸ்சை விபத்துக்குள்ளாக்கிய டிரைவரும், கண்டக்டரும் தான் பொறுப்பு. எனினும் அவர்களுக்கு பதிலாக பஸ் காப்பீடு செய்யப்பட்டுள்ள நிறுவனம் அந்த பெண்ணுக்கு ஒரு மாதத்திற்குள் ரூ. 53 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

தினமணி

The Hindu News :: German national gets Rs 53 lakhs for loss of limb in accident

1 comment:

மாசிலா said...

ஹூம்!
நம்ம உள்நாட்டிலே நாளத்தனைக்கும் ஏகப்பட்ட பேர் சாவுறாங்க. அவங்களோடைய உயிர்லாம் வெறும் மயிருக்குதான் சமானம் போல!!!

என்ன எழவோ!

:-(

-o❢o-

b r e a k i n g   n e w s...