.

Friday, March 2, 2007

'பருத்திவீரன்' பார்த்தார் ரஜினி

பருத்திவீரன்' படத்தை பார்த்த ரஜினி, நடிகர் கார்த்தியை பாராட்டினார்.


அமீர் இயக்கியுள்ள இந்த படம் கடந்தவாரம் வெளியாகி வசூலை குவித்துகொண்டிருக்கிறது.


இந்த படம் நடிகர் ரஜினிக்காக ஒரு பிரிவியூ தியேட்டரில் திரையிடப்பட்டது. ரஜினி மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோரும் படம் பார்த்தனர்.

YAHOO - தமிழ்

16 comments:

VSK said...

சற்றுமுன் அர்த்தமில்லாதாக மாருகிறது இது போன்ற அர்த்தமற்ற செய்திகளால்!

இதுல என்னங்க இருக்கு!
:(

சிவபாலன் said...

SK அய்யா

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

ஆதங்கம் புரிகிறது.

செய்திகளில் சினிமாவும் இருக்கிறது. அதனால் அதை நாம் ஒதுக்க முடியாது. சினிமா நிகழ்வுகளையும் கொடுக்க வேண்டும் எனபதால் இச்செய்தி.

அதனால் இச்செய்தியில் தவறு இருப்பதாக தெரியவில்லை..

எனினும் நீங்கள் சொன்ன கருத்து பரிசிலிக்கப்படும்.

தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு மிக்க நன்றி

தருமி said...

i second what SK has said.

சிவபாலன் said...

தருமி அய்யா

உங்கள் கருத்துக்கு நன்றி!

சினிமா நிகழ்வுகளை உடனுக்குடன் தருவது என்பது தவறுகிடையாது. ( ரஜினி இல்லாமல் சினிமா செய்தியா? :)) )

எனினும் மூத்த பதிவர்கள் இருவர் வந்து சொல்லிவிட்டதால் குழுவினருடன் கலந்து இது பரிசிலீக்கப்படும்.

தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து தரவேண்டும்.

ஜோ/Joe said...

SK ஐயா சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.

இது என்னங்க breaking news ? இது மட்டுமல்ல .ஸ்டாலிம் பிறந்த நாளை சன் டீவி புறக்கணித்ததாக வந்த விமரிசனத்தை ஒரு பதிவாக போட்டிருக்கிறீர்கள் .

இந்த சற்று முன் என்ற வலைப்பதிவு முக்கிய செய்திகளை விமர்சனப் பார்வையில்லாமல் ,செய்திகளை செய்திகளாக மட்டும் கொடுப்பது நல்லது .இல்லையென்றால் இதன் தனித்தன்மை நீடிக்கப்போவதில்லை.

சிறில் அலெக்ஸ் said...

SK, தருமி, ஜோ,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
நிச்சயமாக பரிசீலனை செய்கிறோம்.

இப்போதுதான் துவங்கி முழுமூச்சில் செல்கிறோம். இதுபோன்ற பின்னூட்டங்கள் எங்களை சிறப்பாய் வழிநடத்தும் என்பதில் சந்தேகமில்லை உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்.

நன்றி.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

கலாம் தடுக்கி விழுந்த செய்தியைக் கூட மன்னிக்கலாம் (இது போன்ற செய்திகளை தருவது பொது ஊடகங்களுக்கு வணிகக் கட்டாயம்)..ஆனா, என்னங்க ரஜினி பருத்தி வீரன் பார்த்தது எல்லாம் ஒரு செய்தியா?

ஹ்ம்ம்..பரபரப்புக்காக இல்லாம, கொஞ்சம் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளா தாங்க.

நன்றி

VSK said...

அன்புடனும், அக்கறையுடனும் சொன்ன கருத்துகளை ஆத்திரப்படாமல் ஏற்று, பொறுமையுடன் பதிலிறுத்த சிபாவுக்கும், சிறிலுக்கும் ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓ!
:))

உங்கள் வளர்ச்சியில் பரிவுடன் நாங்கள் ஆதரவளிப்போம்.
:)

சிவபாலன் said...

ரவிசங்கர்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!

நிச்சயம் இதுபோன்ற கருத்துக்கள் எங்களை சரியான பாதையில் வழிநடத்தும்.

மற்ற செய்திகளையும் படித்து கருத்து இருப்பின் தெரிவிக்கவும். அது எங்களுக்கு பேறுதவியாக இருக்கும்.

தொடர்ந்து ஆதரவு அளிக்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சிவபாலன் said...

SK அய்யா

தங்களின் வருகையும் கருத்தும் எங்களின் பாக்கியம்! :)

ஜோ/Joe said...

//அன்புடனும், அக்கறையுடனும் சொன்ன கருத்துகளை ஆத்திரப்படாமல் ஏற்று, பொறுமையுடன் பதிலிறுத்த சிபாவுக்கும், சிறிலுக்கும் ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓ!
:))

உங்கள் வளர்ச்சியில் பரிவுடன் நாங்கள் ஆதரவளிப்போம்.
:)
//

ரிப்பீட்டு!

சிவபாலன் said...

ஜோ,

//தங்களின் வருகையும் கருத்தும் எங்களின் பாக்கியம்! //

ரிப்பீட்டு! :)

SurveySan said...

நடக்கும் நிகழ்வுகளை 'சட்டென்று' வேற mixing இல்லாம தருவது நல்ல விஷயம்தான்.

இந்த மாதிரி செய்திகள், வெள்ளிக்கிழமை அன்று மட்டும் 'வெள்ளி மலரில்' போடலாம்னு ஏதாவது ரூல் நீங்களே போட்டுக்குங்க. சரியாயிடும் :)

தென்றல் said...

சற்றுமுன்...


காலை-யில் office போனால், இப்பலாம் "சற்றுமுன்... " வலைப் பதிவு மட்டும் தான் browse பண்ணுறது.

எப்படி இவ்வளவு quick-ஆ update பண்ண முடிகிறது? கலகுற சந்துரு ..!

வாழ்த்துகள்!!

சிவபாலன் said...

சர்வேசன்,

நல்ல யோசனை.. நிச்சயம் பரிசிலிக்கிறோம்..

ஆனால் New Break ஆன வுடன் கொடுக்க முடியாமல் போகலாம்..

ஏனினும் நல்ல கருத்தை சொல்லியிருக்கீங்க..

அடிக்கடி வந்து கருத்தை சொல்லுங்க..

வருகைக்கு மிக்க நன்றி

சிவபாலன் said...

வசந்தம்,

ரொமப மகிழ்ச்சி!!

சற்றுமுன் சாத்தியமாவதற்கு எங்கள் குழுவின் நண்பர்களும் தங்களைப் போல நல் உள்ளங்களும் தான்.

உங்களுடைய ஆதரவை தொடர்ந்து தரவேண்டும்.

வருகைக்கு மிக்க நன்றி

-o❢o-

b r e a k i n g   n e w s...