.

Wednesday, April 4, 2007

ச: அரசு விரைவு பஸ்ஸக்கும் இன்டர்நெட்டில் முன்பதிவு

சென்னை, ஏப். 4-
ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்வது போல், தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ் களில் பயணம் செய்வதற்கு இணையம் (இன்டர்நெட்) மூலம் முன்பதிவு செய்யும் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும், தொலைதூர விரைவு பஸ்களை அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்குகிறது. 868 வழித்தட பஸ்கள், 66 மாற்று பஸ்கள் என மொத்தம் 934 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விரைவு போக்குவரத்துக்கழகத்தின் 16 பணிமனைகள் உட்பட 20 இடங்களில், இப்போது கணினி மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. பயணிகளின் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இன்டர்நெட் மூலம் முன்பதிவு செய்யும் முறை கொண்டுவரப்படுகிறது.

விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களில் பயணம் செய்வதற்கு, சென்னையில் 30 நாட்களுக்கு முன்பிருந்தும், மற்ற இடங்களில் 10 நாட்களுக்கு முன்பிருந்தும், முன்பதிவு செய்யப்படுகிறது. இணையவழி முன்பதிவு முறை வந்தால், ஒரே மாதிரியாக எல்லா இடங்களிலுமே 30 நாட்களுக்கு முன்பிருந்தே முன்பதிவுசெய்ய வழி ஏற்படும். இதற்காக, பெங்களூர், திருவனந்தபுரம், திருப்பதி உட்பட 33 இடங்களில் இன்டர்நெட் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

எல்லா மையங்களும் சென்னை தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.

மாலை முரசு

1 comment:

Anonymous said...

Good News!

-o❢o-

b r e a k i n g   n e w s...