.

Monday, April 16, 2007

ச: தூக்கம் இல்லை என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ விமானி விமானத்தை ஓட்ட மறுப்பு்

புதுடில்லி : சரியான தூக்கம் இல்லை என்று சொல்லி விமானி விமானத்தை ஓட்ட மறுத்ததால், புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான பயணிகள் 12 மணி நேரம் பெரும் அவதிக்குள்ளானார்கள். புதுடில்லி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 02.30 மணிக்கு பிஏ143 என்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டன் செல்ல தயாராக நின்று கொண்டிருந்தது. அதில் 225 பயணிகள் அமர்ந்திருந்தனர். ஆனால் அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படவில்லை. காரணம் என்ன என்று கேட்டபோது அந்த விமானத்தின் பைலட் கேப்டன் வில்லியம் விமானத்தை ஓட்ட மறுக்கிறார் என்று தெரியவந்தது. என்ன காரணத்தால் ஓட்ட மறுக்கிறார் என்று விசாரித்தபோது அவர் சொன்ன காரணம் வித்தியாசமாக இருந்தது. நேற்றிரவு அவர் தங்கி இருந்த ஹோட்டலில் ஒரே இடையூறாக இருந்ததால் அவரால் சரியாக தூங்க முடியவில்லை என்றும், சரியான தூக்கம் இல்லாமல் விமானத்தை ஓட்ட முடியாது என்றும் சொல்லி விட்டதாக தெரியவந்தது. வேறு வழியின்றி அதிலிருந்த பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டனர். அதற்கு பதில் வேறு விமானமும் ஏற்பாடு செய்யப்படாததால் அதே விமானம் மதியம் 2.30க்கு தான் புறப்பட்டு சென்றது. இது பற்றி பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிகாரி ராதிகா ரெய்சி கூறுகையில் பிரிட்டிஷ் ஏர்வேஸின் பாதுகாப்பு முறைப்படி, பாதுகாப்பை கருத்தில்கொண்டு இம்மாதிரியான நேரங்களில் விமானியை விமானம் ஓட்ட அனுமதிப்பதில்லை என்றார்.


- தினமலர்

3 comments:

Amar said...

A professional pilot!

வடுவூர் குமார் said...

நல்ல வேளை!!
துணை விமானி தான் இருக்கார் என்றாலும்...
கிளம்புவதற்கு முன்பே சொன்னாரே,பாதி வழியில் தூங்கியிருந்தால் என்னாவது?

Anonymous said...

ஹோட்டலில் தூக்க கெட்டுதா? கப்டன் தனியா தூங்கினாரா அல்லது விமானப்பணிப் பெண் யாராவது தூக்கத்தைக் கெடுத்தாங்களா?

நம்ம சுப்பிரமணிய சுவாமி சார் கருத்து எதுவும் சொல்லவில்லையா?

புள்ளிராஜா

-o❢o-

b r e a k i n g   n e w s...