.

Wednesday, May 9, 2007

தீவிரவாதி என நினைத்து நடிகர் ஆர்யா வாரணாசியில் கைது

சென்னை, மே. 9: உள்ளம் கேட்குமே, கலாபக் காதலன், அறிந்தும் அறியாமலும் போன்ற படங்களில் நடித்தவர் ஆர்யா. தமிழ் பட உலகில் வளர்நது வரும் நடிகர். இவர், தற்போது பாலா இயக்கும் நான் கடவுள் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக நீண்ட தாடி, அடர்ந்த மீசையும் வைத்துள்ளார்.

இந்த முகத்தை மறைக்க படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்.

இதற்கிடையில் அமெரிக்க தூதரகத்திற்கு விசா எடுக்கச் சென்ற போது, அவரது தோற்றம் அமெரிக்க போலீஸôருக்கு சந்தேகம் ஏற்படுத்தியது. அதனால் அவரை தூதரகத்திலேயே வைத்து பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். தீவிரவாதிகளுடன் தொடர்புண்டா என்றெல்லாம் விசாரித்திருக்கின்றனர். தான் யார், தனது அடையாளங்கள் இவை இவை என்று சொல்லி ஒருவழியாக வீடு வந்து சேர்ந்திருக்கிறார்.

இந்த பிரச்சினை அடங்குவதற்குள் அடுத்த பிரச்சினையில் ஆர்யா மாட்டிக் கொண்டு தப்பித்துள்ளார்.

இதே படத்திற்காக வாரணாசியில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படப்பிடிப்பிற்காக கலந்து கொள்ளச் சென்ற ஆர்யாவை, அங்குள்ள போலீஸôர் சுற்றி வளைத்தனர். தீவிரவாதி என நினைத்து அவரை கைது செய்து சிறையில் தள்ளினர். ஆர்யாவை விசாரிக்க உயரதிகாரிகளும் விரைந்துள்ளனர்.

தான் ஒரு நடிகர் என்றும், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும், படப்பிடப்பிற்காக வாரணாசிக்கு வந்தவன் என்றும் ஆர்யா சொன்ன பதில்களை அவரகள் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

எந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன், என்ன திட்டத்தோடு வந்திருக்கிற... என கேள்விகளால் துளைத்தெடுக்க ஆரம்பிக்க, தகவலறிந்த படப்பிடிப்புக் குழுவினர் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று தகுந்த ஆதாரங்களைக் காட்டி அவரை விடுவித்துக் கொண்டு வந்துள்ளனர்.

4 comments:

Anonymous said...

என்னய்யா நாலஞ்சு நாளுக்கு முன்னாடி வந்த செய்தியெல்லாம் போடறீங்க?

சிறில் அலெக்ஸ் said...

//என்னய்யா நாலஞ்சு நாளுக்கு முன்னாடி வந்த செய்தியெல்லாம் போடறீங்க? //

நாங்க 'சற்று முன்' தான் படிச்சோம்
:)

Boston Bala said...

இதுக்குத்தான் உங்களை மாதிரி செய்திக் கழுகுகளை வட்டமிட்டு வளைத்துப் பிடிக்க தேடுகிறோம் :D

சென்ஷி said...

//இதுக்குத்தான் உங்களை மாதிரி செய்திக் கழுகுகளை வட்டமிட்டு வளைத்துப் பிடிக்க தேடுகிறோம்//

எப்படி நியுஸ் அனுப்பறதுன்னு சொல்லுங்க.. சினிமா நியுஸா போட்டு தாக்கிடறோம் :)

-o❢o-

b r e a k i n g   n e w s...