.

Wednesday, July 11, 2007

கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் விலக்கு: கருணாநிதி அதிரடி!

தமிழகத்தில் நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத் தேர்தலையும், நடக்கப் போகிற கூட்டுறவு சங்கத் தேர்தல்களையும் அடியோடு விலக்கம் (ரத்து) செய்து முதல்வர் கருணாநிதி நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

கூட்டுறவு சங்கத் தேர்தலால் கூட்டணியில் பொருமல் ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவை முதல்வர் எடுத்துள்ளார். கூட்டுறவு நோக்கத்துக்கு மாறாக தேர்தல் நடந்ததாக குறிப்பிட்டுள்ள முதல்வர், சட்டசபை கட்சிகளின் தலைவர்களை கலந்து ஆலோசித்து புதிய வழிமுறைகளை வகுத்து தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2001ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்பட்டு, தனி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அவை கொண்டு வரப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சி முடியும் வரை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. 2006ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, கடந்த மாதம் 8ம் தேதியன்று தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் பணிகள் துவங்கின. ஐந்து கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல் கட்ட தேர்தல் இம்மாதம் 7ம் தேதி துவங்கியது. இந்த தேர்தலை அ.தி.மு.க., ம.தி.மு.க., போன்ற எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், ஆளுங்கட்சியினரே அனைத்து பதவிகளையும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினர். ஆளும் கூட்டணியில் உள்ள கட்சியினருக்கு கூட பதவிகளை விட்டுக் கொடுக்க மறுத்து, பல இடங்களில் மற்ற கட்சியினர் மனு தாக்கல் கூட செய்ய விடாமல் தடுத்தனர்.இதனால், கூட்டணி கட்சியினர் கடும் அதிருப்தியடைந்தனர்.

பா.ம.க., தலைவர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் செயலர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் நல்லகண்ணு ஆகியோர் ஆளுங்கட்சியினரின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்தனர். பலத்த பாதிப்புக்கு ஆளான காங்கிரசார் "வழக்கம் போல்' அமைதி காத்தனர். ஆனால், பா.ம.க., மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் அதிருப்தியால் கூட்டணியில் பிளவு ஏற்படும் நிலை உருவானது. ஆளுங்கட்சியினர் அராஜகம் மூலம் கூட்டுறவு அமைப்புகளை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சிகள் மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து முதல் கட்ட தேர்தலில் 25 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நீக்குவதாக செய்வதாக கூட்டுறவு அமைச்சர் கோ.சி.மணி முன்னதாக அறிவித்தார். இப்போது முழுமையாக நீக்கம் செய்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.


நன்றி: தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...