.

Wednesday, July 11, 2007

திருப்பூரில் வைரமுத்து பிறந்த நாள் விழா: கவிஞர் தமிழச்சிக்கு விருது

ஜுலை 13 கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாள் ஆகும். இந்த நாள் வெற்றித் தமிழர் பேரவை அமைப்பின் சார்பில் கவிஞர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கவிஞர்கள் திருநாள் விழா 13-ந் தேதி மாலை 6 மணிக்கு திருப்பூரில் நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கவிஞர் வைரமுத்து தன் பிறந்த நாளில் கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்குகிறார். இந்த ஆண்டு சென்னையைச் சேர்ந்த கவிஞர் தமிழச்சிக்கு ரூ.10 ஆயிரமும், பட்டயமும் கவிஞர் வைரமுத்து வழங்குகிறார்.

தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் வாழ்த்துரை வழங்குகிறார். கவிஞர் வைரமுத்துவின் புகழ் பெற்ற படைப்புகளான கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் என்ற 2 படைப்புகளின் மையக் கருத்துக்களை அடிப்படை யாகக் கொண்ட சிறப்புப் பட்டி மன்றம் நடக்கிறது.

வெற்றித் தமிழர் பேர வையின் திருப்பூர் நகரத் தலைவர் ஜீவானந்தம் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். கணக்காயர் லோக நாதன் வரவேற்று பேசுகிறார். சிற்பி ரகுநாதன், நன்றியுரையாற்றுகிறார். விழா நிகழ்ச்சிகளை கனகலட்சுமி தொகுத்து வழங்குகிறார். விழாவில் கலந்து கொள்ள கவிஞர் வைரமுத்து நாளை மறுநாள் காலை விமானத்தில் கோவை சென்று திருப்பூர் செல்கிறார்.

மாலைமலர்

1 comment:

கோபிநாத் said...

\\இந்த ஆண்டு சென்னையைச் சேர்ந்த கவிஞர் தமிழச்சிக்கு ரூ.10 ஆயிரமும், பட்டயமும் கவிஞர் வைரமுத்து வழங்குகிறார்.\\

கவிஞர் தமிழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் ;))

-o❢o-

b r e a k i n g   n e w s...