.

Wednesday, July 11, 2007

ஒவ்வொரு துறை வாரியாக கருணாநிதி நேரடி ஆய்வு: அமைச்சர்களுடன் ஆலோசனை

முதல்-அமைச்சர் கருணாநிதி ஒவ்வொரு துறையிலும் நடந்துள்ள பணிகள், நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து நேரடி ஆய்வு செய்கிறார்.

இன்று மாலை 4 மணிக்கு நெடுஞ்சாலைத்துறை பணி கள் குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி ஆய்வு செய்கிறார்.அமைச்சர் வெள்ளைக் கோவில் சாமிநாதன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்துகிறார்.

இதில் சட்டமன்றத்தில் அறிவிக் கப்பட்ட அறிவிப்புகள் எவ்வாறு செயல் வடிவம் பெற்றுள்ளன. மத்திய மாநில நிதி ஒதுக்கீடு எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்த புதிய பணிகளை மேற் கொள்வது, ஏற்கனவே நடந்து வரும் பணிகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்து கேட்டறிகிறார். மேல் நடவடிக்கை எடுக்க ஆலோசனையும் வழங்குகிறார்.

இதுபோல

  • நாளை பொதுப் பணித்துறையிலும்,
  • 13-ம் தேதி வீட்டு வசதி துறையிலும்,
  • 14-ந் தேதி உணவு, விவசாயம்,
  • 15-ந் தேதி ஆதிதிராவிடர் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் நலத்துறை
  • 16-ந் தேதி சமூகநலத்துறை, பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகளில்
  • 17-ந் தேதி நகராட்சி, உள்ளாட்சித்துறை பணிகள் பற்றியும்,
  • 18-ந் தேதி சுகாதாரத்துறை பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும்

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

மாலைமலர்

1 comment:

Boston Bala said...

நெடுஞ்சாலைத் துறை பணிகள்: முதல்வர் ஆய்வு


நெடுஞ்சாலைத் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து முதல்வர் கருணாநிதி புதன்கிழமை ஆய்வு செய்தார்.

6,530 கி.மீ. நீள சாலைப் பணிகள், 12 மேம்பாலங்கள், 175 பெரிய மற்றும் சிறிய பாலங்கள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளை வலியுறுத்தினார். சாலைகளைப் பராமரிக்கும் பணிகளுக்காக நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 723 கோடியைப் பயன்படுத்தி 8,200 கி.மீ சாலைகளைப் புதுப்பிக்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...