நடிகர் சத்யராஜ இசையமைப் பாளர் தேவா ஆகியோருக்கு சத்யபாமா பல்கலை கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங் கப்படுகிறது. இதற்கான விழா பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் இன்று மாலை நடக்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையதலைவர் டாக்டர் மாதவன்நாயர் பட் டங்களை வழங்குகிறார். பல்கலைகழக வேந்தர் ஜேப்பியார் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். டாக்டர் மயில்வாகனன்நடராஜன், எம்.பி. நிர்மல் ஆகியோருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்படு கிறது.
IndiaGlitz - Doctorate for Sathyaraj, Deva - Tamil Movie News
DNA - After Hrs - Tamil hero Satyaraj awarded lifetime contribution - Daily News & Analysis
Wednesday, July 11, 2007
பட்டமளிப்பு விழா: சத்யராஜ், தேவாவுக்கு டாக்டர் பட்டம்
Labels:
ஆளுமை,
இசை,
கலை-இலக்கியம்,
சினிமா,
விருது
Posted by Boston Bala at 10:31 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
தாஸ், நீ இப்ப பாஸ்!
முட்டம் சின்னப்பதாஸ் பாத்திரத்தில் நடித்த எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியதைப் பெருமையாகக் கருதுகிறேன் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்தார்.
சத்தியபாமா பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்ட கெüரவ டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொண்ட அவர் புதன்கிழமை வழங்கிய ஏற்புரை:
கடலோரக் கவிதைகள் படத்தில் முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பதாஸ் என்ற பாத்திரத்தில் நடித்தேன். ஆனால், அதே ஊரைச் சேர்ந்த ஜேப்பியார் தற்போது எனக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெüரவித்துள்ளார். எம்ஜிஆரின் சீடரான ஜேப்பியாரின் கையால் பட்டம் பெறுவது எம்ஜிஆரே வாழ்த்துவதற்கு ஈடானது.
ஆஸ்கர் போன்ற விருதுகளை நமக்கு ஒருபோதும் கொடுக்கமாட்டார்கள். "பெரியார்' திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாராட்டி இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளதை நான் பெருமையாகக் கருதுகிறேன். இப்படத்தில் நடித்ததால் அரசு எனக்கு பெரியார் விருதை வழங்கியது. படம் வெளியானபின் தற்போது டாக்டர் பட்டம் பெற்றுள்ளது எனக்குப் பெருமிதமாக உள்ளது.
நான் சினிமாவில் நடிப்பதை எனது தாயார் விரும்பவில்லை. ஆனால், நான் டாக்டராக வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். தற்போது எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியதன் மூலம் எனது தாயின் ஆசையை ஜேப்பியார் நிறைவேற்றியுள்ளார் என்றார் சத்யராஜ்.
Post a Comment