அதிமுக கூட்டணிக்கு ராமதாஸ் வந்தால்
அன்புடன் வரவேற்போம்: ஜெ.
ஜூலை 10, 2007
சென்னை: அதிமுக கூட்டணியில் சேர பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தீர்மானித்தால், அவரை பாசத்துடன் வரவேற்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு நேற்று ஜெயலலிதா வந்தார். அங்கு பல்வேறு கட்சியிலிருந்து பிரிந்து வந்தவர்கள் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை ஜெயலலிதா சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், டாக்டர் ராமதாஸ் அதிமுக அணிக்கு வந்தால் அவரை வரவேற்போம். பாசத்துடன், உரிய கெளரவத்துடன் அவரை நடத்துவோம் (அப்படியா!!).
காவிரி நீர்ப் பிரச்சினையில் தனது கடமையைச் செய்ய முதல்வர் கருணாநிதி தவறி விட்டார். கர்நாடகத்திலிருந்து தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று அந்த மாநில துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் பெங்களூருக்குச் சென்று ஓய்வு எடுக்கிறார் கருணாநிதி.
அங்கு கர்நாடக முதல்வரைச் சந்தித்து தண்ணீர் திறந்து விடுங்கள் என்று கேட்பதற்கு அவருக்கு நேரம் இல்லை.
தயாநிதி மாறன் மீதான ரூ. 10 ஆயிரம் கோடி மோசடி குறித்த செய்தி மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இந்தப் புகாரை அவர்களே சொல்லியிருப்பதால் உண்மையாகத்தான் இருக்கும். இதுபற்றி அமைச்சர் ராசாதான் விளக்கமாக தெரிவிக்க வேண்டும்.
இப்போது ஏன் இந்த மோசடியை அம்பலப்படுத்துகிறார்கள். இதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என்பதையும் இந்த விவகாரத்தில் உண்மை நிலைமையையும் திமுக விளக்க வேண்டும்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இன்னும் சில நாட்களில் அறிவிப்போம். எங்களது அணியின் அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் ஓம் பிரகாஷ் செளதாலா வீட்டில் நடைபெறும்.
கொல்கத்தாவில் நந்திகிராமம் பிரச்சினையில் மேற்கு வங்க அரசை எதிர்த்து பேரணி நடத்தவுள்ளார் மம்தா பானர்ஜி. அதில் நானும் பங்கேற்க வேண்டும் என்று கோரி என்னைப் பார்க்க வந்தார். ஆனால் நான் அந்த பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்றார் ஜெயலலிதா.
நன்றி : தட்ஸ் தமிழ்
Wednesday, July 11, 2007
'அன்புடன் வரவேற்போம்' - ஜெ
Labels:
அரசியல்
Posted by கோவி.கண்ணன் [GK] at 7:24 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
4 comments:
அடுத்த தேர்தல் வரை மரியாதையுடனும் பாசத்துடனும் நடத்துவோம் என்று சொல்லியிருக்கலாம்
//ரீமேக் சீசனில் 'நான் அவன் இல்லை'...மற்றும்...'பில்லா' போன்ற படங்கள் மறுவடிவம் பெற்று வெள்ளித்திரைக்கு வருகிறது. அது போல் தமிழக அரசியலிலும் பாசமலர் அண்ணன் அன்பு சகோதரர் இராமதாஸ் மற்றும் அன்பு சகோதரி ஜெயலலிதா பாசப் பிணைப்புகளின் பாசமலர்காட்சிகள் கடந்த சட்டமன்ற ஊடலுக்கு பிறகு மறுவடிவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மீண்டும் பாசமலர் காட்சிகள் விரைவில் செய்தித்'துரை'கள் மூலம் தெரியவரும் நேரம் நெருங்குகிறது... ஹி ஹி ... அரசியலில் இதெல்லாம் அசிங்கம் இல்லையப்பா. அடச்சீசீசீயல். :))))))))))))))) //
இது போன்ற தனிநபர் கருத்துக்களை சற்றுமுன்னில் தந்தால் சற்றுமுன்னின் செய்திகள் நம்பகத்தன்மை, நடுநிலைம பெரும் அடி வாங்கும். அரசியல் ரீதியாகவும் தேவை இல்லாத சிக்கல்கள் வரும். சற்றுமுன் ஒரு செய்தித் தளமா, கருத்துகளை உருவாக்கும் வார இதழ் போன்ற ஒன்றா என்று தெளிவு படுத்திக் கொள்ளலாம்.
இது போன்ற பதிவாசிரியர்களின் தனிப்பட்ட கருத்துக்களை செய்தியில் தராமல் அவரே பின்னூட்டத்தில் தெரிவிப்பது சரியாக இருக்கும் என்று முன்னர் சுட்டிக்காட்டப்பட்டது என்று நினைக்கிறேன்.
தலைப்பும் தகவலும் முற்றிலும் misleading. திரைப்படத் தகவல் என்று நினைத்து வந்தேன்.
//இது போன்ற பதிவாசிரியர்களின் தனிப்பட்ட கருத்துக்களை செய்தியில் தராமல் அவரே பின்னூட்டத்தில் தெரிவிப்பது சரியாக இருக்கும் என்று முன்னர் சுட்டிக்காட்டப்பட்டது என்று நினைக்கிறேன். //
ரவி,
இங்கு யாரையும் விமர்சிக்கவில்லை, சுவையான ஒரு உவமானம் மட்டுமே.
தட்ஸ் தமிழில் இருந்து எடுத்துப் போடுவதாகவும் கூட சிலர் விமர்சனம் செய்கின்றனர். செய்திகளை சுவையாக சொல்லமுடியும் என்று முயற்சித்தேன்.
சரி அடுத்து ? விட்டுடுவோம்.
:))
கோவி. கண்ணன் - நீங்கள் விமர்சிக்கவில்லை தான். நகைச்சுவையும் நன்று. ஆனால், செய்தி அறிக்கை, நையாண்டியையும் தலையங்கத்தையும் கலக்க வேண்டாமே? நையாண்டிச் செய்திகளுக்கு ஒரு வலைப்பதிவு (தமிழ் onion?)ஆரம்பிக்கலாம் என்று சிறில் கூட ஒரு முறை சொல்லி இருந்தார். அங்கு முயல்வது பொருத்தமாக இருக்கும்
Post a Comment