.

Wednesday, July 11, 2007

கிளாஸ்கோ எதிரொலி : பெங்களூரு ஐ.டி கம்பனிகள் கலக்கம்

கிளாஸ்கோ நகர தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கஃபீல் அஹ்மது பெங்களூருவில் சிலகாலம் தகவல்தொழிற்நுட்ப நிறுவனமொன்றில் பணியாற்றிய செய்தி வெளியானதை அடுத்து பன்னாட்டு நிறுவனங்களின்் தகவல்களின் பாதுகாப்புக் குறித்து கலக்கம் எழுந்துள்ளது. சரியான பாதுகாப்பு கருவிகளையும் நடத்தைகளையும் கொண்டிராத நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. கஃபீல் திசம்பர் 2005 இலிருந்து ஆகஸ்ட் 2006வரை இன்ஃபோடெக் எந்தர்பிரைசஸ் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். ்இந்தஇந்த இந்த நிறுவனம் விமான தயாரிப்புத் துறையில் பல பன்னாட்டு வாடிக்கையாளர்களுக்காக பெங்களூருவிலும் ஹைதராபாத்திலும் அவர்களின் வடிவமைப்பு வேலையை செய்து கொடுக்கிறது. அந்த நிறுவனத்தில் விமானங்களை வெடிவைத்து தகர்க்கும் சதிகாரர்களுடன் சம்பந்தப்பட்டுள்ள கஃபீல் வேலை பார்த்திருப்பது வெளிநாட்டு நிறுவனங்களின் இரகசியம் காக்கவேண்டிய வேலைகளை இந்தியாவிற்கு கொடுப்பது பற்றி பல விவாதங்களை எழுப்பவிருக்கிறது.

மேலும்..DNA - India - Terror link scares IT firms - Daily News & Analysis

1 comment:

Anonymous said...

பெங்களூரு பொருளாதார முன்னேற்றம் அடைந்துவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு கும்பல் வேலை செய்துகொண்டிருக்கிறது என்பது நன்றாக தெரிகிறது.

-o❢o-

b r e a k i n g   n e w s...