.

Wednesday, July 11, 2007

மும்பையில் சர்ச்சைக்குரிய நிலத்தில் மாளிகை - சிக்கலில் இருந்து தப்பினார் முகேஷ்

மும்பையில் சர்ச்சைக்குரிய இடத்தில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி வீடு கட்டிக் கொள்ள தடை ஏதும் இல்லை என மகாராஷ்டிரா வக்ப் வாரியம் சான்றிதழ் அளித்து உள்ளது.

மும்பையில் ரூ.100 கோடியில் 27 மாடி மாளிகை கட்டி வருகிறார் முகேஷ் அம்பானி. மொத்தம் 4,532 சதுர மீட்டர் பரப்பில் உள்ள அந்த நிலத்தில் வீடு கட்டுவது சட்ட விரோதம் என மகாராஷ்டிர அரசு அறிவித்தது. காரணம், அந்த இடம் மகாராஷ்டிர வக்ப் வாரியத்துக்கு சொந்தமாக இருந்தது. அது கரீம்பாய் இப்ராஹிம் கோஜா அநாதைகள் இல்லத்துக்கு மாற்றப்பட்டது.

ஆனால் அந்த நிலத்தை மாற்ற வக்ப் வாரியத்துக்கு உரிமை இல்லை என மாநில அரசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்துதான் சட்ட விரோதமானது என மாநில அரசு அறிவித்தது. இப்போது இந்த விஷயத்தில் புதிய திருப்பமாக, வக்ஃப் வாரியத்துக்கு ரூ.16 லட்சத்துக்கு தந்து தடையில்லா சான்றிதழ் பெற்றுவிட்டார். இது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

மாநில அரசின் சட்டப்படி, வக்ஃப் வாரிய சொத்துகளை விற்பதற்கோ, குத்தகைக்கு தருவதற்கோ வாரியத்துக்கு அனுமதி இல்லை. ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு சொத்துகளை மாற்ற மட்டும்தான் அதிகாரம் உண்டு.

இந்நிலையில் வக்ப் வாரியம் வெளியிட்ட அறிக்கைபடி, முகேஷ் அம்பானி வீடு கட்டும் இடம் தங்களுக்கு சொந்தமானது அல்ல எனவும் அது கரீம்பாய் இப்ராஹிம் கோஜா அநாதைகள் இல்லத்துக்கு சொந்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இது வெளியான சில மணி நேரங்களில், மகாராஷ்டிர அரசின் வக்ப் துறை ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த இடம் வக்ப் வாரியத் துக்கு சொந்தமானதுதான் என தெரிவித்துள்ளது.

- தினகரன்

முந்தைய சற்றுமுன்...: வக்ப் போர்டிடம் நிலம் வாங்கியதால் சிக்கல்.

IBNLive.com > Mukesh Ambani pays 16 lakh to Wakf board, gets NOC : Mukesh Ambani, illegal land, Mumbai, skyscraper

Zee News - Wakf land can`t be sold, transferred: Central Wakf Council

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...