.

Monday, July 2, 2007

நிமிட்ஸ்: அமெரிக்க வீரர்கள் சென்னையில்.

அமெரிக்காவின் மிகப் பெரிய விமானத்தாங்கி கப்பலான நிமிட்ஸ், வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா புறப்பட்டுள்ளது. இதன் பயண திட்டத்தில் சென்னையும் இடம் பெற்று இருந்தது.

இந்த கப்பல் அணுசக்தி மூலம் இயங்க கூடியது. எனவே அணு கசிவு ஆபத்து ஏற்படலாம் என்பதால் சென்னை வர எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் மத்திய அரசு அனுமதித்ததன் மூலம் திட்டமிட்டபடி இன்று காலை 6 மணிக்கு சென்னை வந்தது.

தற்போது சென்னை மெரீனா கடற்கரைக்கு கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் அது நிறுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் கப்பல் பணியாளர்கள், அதிகாரிகள் உள்பட 6 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் சென்னை நகருக்குள் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
அவர்கள் உல்லாசமாக பொழுதை போக்கி மகிழ்வ தற்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைவரும் படகு மூலம் சென்னை துறை முகத்துக்கு அழைத்து வரப்படுகிறார்கள். முதல் படகு இன்று காலை கரைக்கு வந்தது.

இரவில் அனைவரும் சென்னை ஓட்டல்களில் தங்குகின்றனர். இதற்காக முக்கிய ஸ்டார் ஓட்டல்கள் சென்னையில் இருந்து புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அனைத்து ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் அவர்களுக்காக "புக்'' செய்யப்பட்டுள்ளன. அங்கு அமெரிக்க சுதந்திர தின விழாவை கொண்டாடுகிறார்கள். அப்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், விருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியை அனுபவிக்கும் அதே நேரத்தில் அவர்கள் பல்வேறு சமூக சேவை பணிகளிலும் ஈடுபடுகின்றனர். அனாதை இல்லம், மன நல காப்பகம் போன்றவற்றுக்கு சென்று உதவி செய்கிறார்கள். அண்ணா சாலையிலுள்ள மதரஸ யே ஆஸம் பள்ளி விடுதிக்குச் சென்ற அமெரிக்க வீரர்கள் அங்கு துப்புரவு பணி உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.

நிமிட்ஸ் போர் கப்பல் அணுசக்தி மூலம் இயக்குவதால் அதில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கசிவு ஏற்பட்டால் சென்னை நகரமே அழிந்து போகும் அளவுக்கு ஆபத்தானகும்.

எனவே அணு கசிவு ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க இந்திய அணு விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்திய போர் கப்பல் மூலம் அந்த பகுதிக்கு சென் றுள்ளனர். நிமிட்ஸ் கப்பல் அருகே இந்திய கப்பல் முகா மிட்டுள்ளது. அணு கசிவை கண்டு பிடிக்கும் கருவி அதில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் 24 மணி நேரமும் கண் காணிப்பார்கள். 5-ந்தேதி அமெரிக்க கப்பல் புறப்பட்டு செல்கிறது. அதுவரை விஞ்ஞானிகள் அங்கேயே தங்கி இருப்பார்கள்.

அதே போல 2 வேன்களில் விஞ்ஞானிகள் குழு கடற்கரையில் சுற்றி வரும். அவர்களும் கருவி மூலம் அணு கசிவை கண்காணிப்பார்கள்.

1 comment:

Anonymous said...

From Dinamalar:

அமெரிக்கர்களுக்கு சென்னையில் 18க்கும் மேற்பட்ட நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. பல மாதங்களாக கடலில் மிதந்த அமெரிக்கர்கள் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் ஜாலியாக பொழுதை கழிக்க அமெரிக்க நாட்டு துõதரக அதிகாரிகள் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அமெரிக்கர்களை வரவேற்க சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து மாடலிங் அழகிகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு அழகிகளுடன் சென்னையில் உள்ள துணை நடிகைகளும் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குடி, கும்மாளத்துடன் வெளிநாட்டு கலாசாரத்தில் நடத்தப்படும் நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பே வெளிநாட்டு அழகிகள் கலாசார நிகழ்ச்சி என்ற பெயரில் சென்னை வந்து தங்கியுள்ளனர். சில நாட்கள் சென்னையில் தங்கும் அமெரிக்கர்களை நன்கு கவனிக்குமாறு நம்மூர் அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கர்களை குஷிப்படுத்துவதால் இந்தியா, அமெரிக்கா உறவு வலுப்படும் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தெரிவித்தனர்.

(கப்பலுக்கு எய்ட்ஸ் என்று வேறு பெயர் இருக்கலாம்.)

-o❢o-

b r e a k i n g   n e w s...