.

Tuesday, August 7, 2007

புதிய பெரிய கோள் கண்டுபிடிப்பு

அண்டவெளியில் இதுவரை இல்லாத அளவில் பெரியதொரு கோளைக் கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

புவியிலிருந்து 1,400 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் ஹெர்குலஸ் எனப்படும் நட்சத்திரக் கூட்டத்தில் இந்தக் கோள் உள்ளது. நமது சூரிய மண்டலத்திலுள்ள வியாழனை விட புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கோள் எழுபது மடங்கு பெரியது என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு விண் பௌதிகப் பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளது.

டிரெஸ்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோள்தான் மனித வர்க்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கோளாகும். மூன்று தொலை நோக்கிகளை கொண்டு இந்தக் கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் இரண்டு அமெரிக்காவிலும் ஒன்று கனேரித் தீவிலும் உள்ளன. இந்தக் கோள் அருகாமையிலுள்ள நட்சத்திரத்தை கடந்து செல்லும் போது, அந்த நட்சத்திரத்தின் ஒளியை எவ்வாறு மறைக்கிறது என்பதை அளந்து அதன் அடிப்படையில் இந்தப் புதிய கோளின் அளவை கணித்துள்ளார்கள்.

ஆனாலும் டிரெஸ்-4 எனப்படும் இந்தப் புதிய கோள் வியாழனிடமிருந்து பலவகையில் மாறுபடுகிறது. அது அளவில் பெரியதாக இருந்தாலும் எடை குறைந்தே காணப்படுகிறது. வியாழன் ஒரு குளிர்ந்த கோள். ஆனால் இந்தப் புதிய கோளின் வெப்பநிலை 1300 டிகிரி செல்சியஸ் அளவிலுள்ளது.

இந்தப் புதிய கோளானது அதனைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தின் மீது குறைந்த அளவே ஈர்ப்பு சக்தியை வெளிப்படுத்துவதால், அந்தக் காற்றுப் பகுதி அண்டவெளியில் ஒரு வால் நட்சத்திரம் போன்று வளைந்து வெளியேறக் கூடும் எனவும் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்

தமிழ் பிபிசி

BBC NEWS | Science/Nature | Team finds largest exoplanet yet
ScienceDaily: Largest Transiting Extrasolar Planet Found Around A Distant Star
ABC News: Scientists Discover Largest Known Planet Outside of Solar System

3 comments:

குமரன் (Kumaran) said...

நவகிரகங்களில் இன்னொன்றைச் சேர்க்கச் சொல்லி சிலர் கிளம்புவார்கள் பாருங்கள். :-)

Boston Bala said...

ஏற்கனவே மாந்தி இருக்காரே ;)

வடுவூர் குமார் said...

1400 ஒளி ஆண்டுகள்!!!!
அவர்கள் வெளியிட்ட பல விபரங்கள் ஒரு வித அனுமானமாகவே இருக்கக்கூடுமா?

-o❢o-

b r e a k i n g   n e w s...