மதுரையில் நடந்த கள ஆய்வின் போது, சங்க கால பாண்டிய மன்னனின் முதல் செப்பேடு கிடைத்துள்ளது. 2 கிலோ 734 கிராம் எடையுள்ள இந்த செப்பேட்டில் பாண்டிய வராலாறு பற்றி புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு இளையான்புத்தூர் செப்பேடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
- மாலை முரசு
Friday, March 9, 2007
சங்க கால பாண்டிய மன்னனின் செப்பேடு
Labels:
தமிழ்நாடு
Posted by சிவபாலன் at 7:45 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
4 comments:
கி.பி.570-ல் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் மதுரையில் பாண்டிய அரசை (சங்க காலம்) நிறுவினான். அன்று முதல் கி.பி. ஆயிரம் வரை ஆட்சிப் புரிந்த பாண்டியர்களை முற்கால பாண்டியர் என்று அழைப்பர். அக்காலத்தில் நான்கு அரசர்கள் வெளியிட்ட ஆறு செப்பேடுகள் மட்டும் இதுவரை கிடைத்துள்ளன.
கி.பி.726-ல் அரிகேசரி பராங்குச மாறவர்மனின் 36-ம் ஆண்டு செப்பேடு மதுரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செப்பேடு முற்கால பாண்டியர்களின் முதல் செப்பேடு என்ற பெருமை பெறுகிறது.
இவை 24 செ.மீட்டர் நீளமும், 11.5 செ.மீட்டர் அகலமும் கொண்டு 2 கிலோ 734 கிராம் எடை கொண்டதாக உள்ளது.
வடிவலம்ப நின்ற பாண்டியன் வழிவந்த ஐயந்தவர்மன் என்ற மன்னன் மகன் அரிகேசரி பராங்குசன் மாறவர்மன் ஆசிநாட்டு கம்பலை என்னும் மறவனை வென்று அவன் நிலத்தை அரசுடமையாக்கினான். காடாக கிடந்த அந்த நிலங்களை 36-ம் ஆட்சியாண்டில் இளையான்புத்தூர் என்று பெயரிட்டு செப்பேடும் வெட்டி தந்தான்.
அந்த நிலத்திற்கு நான்கு பக்க எல்லைகளும் குறிக்கப்பட்டுள்ளன.
சின்னமனூர் செப்பேட்டை எழுதியவரே இச்செப்பேட்டையும் எழுதியிருப்பதையும், இந்த செப்பேடு முதலில் ஓலையில் எழுதப்பட்டு பின் 100 ஆண்டுகள் கழித்து செப்பேட்டில் பொறிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
வைகைக்கரை, ஏனாதி ஆகிய ஊர்களில் இம்மன்னனின் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. வரலாற்று சிறப்பு மிக்க இச்செப்பேட்டால் பாண்டிய வரலாற்றுக்கு புதிய செய்திகள் கிடைத்துள்ளன.
பாண்டியர் செப்பேடுகளின் பெயர் மரபுபடி இச்செப்பேட்டிற்கு கொடையளிக்கப்பட்ட ஊரின் பெய ரால் இளையான்புத்தூர் செப்பேடு என்று பெயரளித்துள்ளனர்,
அந்தச் செப்பேட்டைப் பற்றியும் அது சொல்லும் செய்தியைப் பற்றியும் அறியத் தந்தமைக்கு நன்றி. நான்காம் நூற்றாண்டு மன்னனின் செப்பேடு என்பது மிகவும் அபூர்வம். இது தொடர்பான மற்ற செய்திகளையும் சொல்லுங்களேன்.
செய்தி எல்லாம் சரியாத் தான் வந்திருக்கு. ஆனால் சங்க காலம் என்பது தவறுன்னு நினைக்கிறேன். சங்க காலம் என்பது கி.மு.வில் முடிஞ்சதாக எண்ணுகிறேன். ஆதாரங்கள் தமிழ் இலக்கிய வரலாற்றின் படி சொல்கிறேன். இது கிட்டத் தட்டப் பல்லவர் காலத்தது. அப்போது தான் பாண்டியரும் சிறந்து விளங்கினார்கள்.
Post a Comment