.

Friday, March 9, 2007

பாகிஸ்தானின் தலைமை நீதிபதி சஸ்பெண்ட்

பாகிஸ்தானின் தலைமை நீதிபதி இஃப்திகர் சௌத்ரி (Iftikhar Chaudhry) இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக அந்நாட்டின் அதிபர் பெர்வீஸ் முஷாரஃப் இந்த முடிவை எடுத்தார்.

அரசின் மனித உரிமை மீறல்களை இஃப்திகர் மும்முரமாக ஆராய்ந்தார். எதிர்க்கட்சியினர் காணாமல் போவதையும், ஆளுங்கட்சியை விமர்சிப்போர் காவல்துறையினரால் சித்திரவதைக்கு ஆளாவதையும் விசாரணைக்குட்படுத்தினார்.

தனது மகனுக்கு உயரிய பதவியை வாங்கித் தந்தார் என்னும் குற்றச்சாட்டும் அவர் மேல் உள்ளது. அதை வெளிப்படுத்திய ஊடகங்களை உச்சநீதிமன்றத்துக்கு வரவழைத்து, கண்டித்திருக்கிறார்.

BBC NEWS | South Asia | Pakistan's top judge is suspended

1 comment:

சிவபாலன் said...

பாபா

பெர்வீஸ் முஷாரஃப் தொடர்து அதிபராக இருப்பது ஒரு மிகப் பெரிய அரசியல் விளையாட்டு..

இது போன்ற சம்பவங்கள் அதை நிறுபிக்கின்றது

-o❢o-

b r e a k i n g   n e w s...