.

Friday, March 9, 2007

EU, உலக தட்பவெட்ப மாற்றம் குறித்த ஒப்பந்தம்

உலகளாவிய தட்பவெட்ப மாற்றங்கள் (Golbal Climate Change) குறித்த ஒப்பந்தம் ஒன்றை ஐரோப்பிய ஐக்கிய (European Union) நாடுகள் உருவாக்கியுள்ளன.

இதன்படி ஐரோப்பி நாடுகள் தட்ப வெட்பம் பற்றிய செயலாக்கத்தில் முதன்மை பெற்றிருக்கிறார்கள். அதிகமாக சுற்றுப்புறத்தை மாசு படுத்தும் ஐரோப்பிய நாடுகளை இந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்தவிருக்கிறது.

EU drafts compromise agreement on climate change
EU SUMMIT Leaders reach deal on fighting climate change
EU adopts binding energy, climate targets: Merkel

Google News 1000+ articles

2 comments:

Boston Bala said...

BBCTamil.com: சுற்றுச்சுழல் தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம்

சுற்றுச்சுழல் தொடர்பான மிகப்பெரிய இலக்கை கொண்ட திட்டம் ஒன்றில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, காலநிலை மாற்றத்தை தடுப்பதில் உலகத்தை முன் நடத்தி செல்லும் நிலையில் ஐரோப்பா இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஒசே மானுவல் பர்ரோசி கூறியுள்ளார்.

புவியை வெப்பமாக்கும் வாயுக்களை 2020 ஆண்டு வாக்கில் குறைந்தது இருபது சதவிகிதமாவது குறைப்பது என ப்ரசல்ஸில் நடைபெற்ற மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒப்பு கொண்டுள்ளார்கள்.

இது மட்டுமன்றி புதுப்பிக்கக் கூடிய மின்சக்தி, எரிசக்தியை ஒரு குறிப்பிட்ட அளவிலாவது கட்டாயமாக பயன்படுத்துவது என்ற முடிவையும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த 27 தலைவர்களும் ஒப்பு கொண்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் பெரும் இலக்கை கொண்டது என்றும் இது ஒரு உண்மையான திட்டம் என்றும் ஜெர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் கூறியுள்ளார்.

Boston Bala said...

காலநிலை மாற்றம் தொடர்பில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் அமைச்சர்கள் மாநாடு


ஜெர்மனிய நகரான பொட்ஸ்டாமில், காலநிலை மற்றம் தொடர்பிலான பரந்துபட்ட உடன்பாடு ஒன்றைக் காண்பதற்காக, முன்னணி தொழில் வள நாடுகளைச் சேர்ந்த சுற்றுச் சூழல் அமைச்சர்கள், முக்கிய வளர்ந்து வரும் நாடுகளின் அமைச்சர்களைச் சந்திக்கிறார்கள்.

2020 ஆம் ஆண்டளவில், கார்பன் வெளியேற்றத்தை 1990ல் இருந்த அளவை விட குறைவாக, அதாவது 20 வீதத்துக்குக் குறைக்கப் போவதாக, கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்திருந்தது.

ஆனால் இந்த விடயத்தை அமெரிக்காவும், வளர்ந்து வரும் நாடுகளும் தொடராவிட்டால் இதனல் எந்தவிதமான பலனும் கிடையாது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

கடந்த காலங்களில் மேற்கு நாடுகள் ஏற்கனவே அனுபவித்த நிலத்தடி எரிபொருட்களின் பலனை வளர்ந்து வரும் நாடுகளுக்கு அவை மறுப்பது, ஒரு போலித்தனமான விமர்சனம் என்று இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரேசில், சீனா, இந்தியா, மெக்சிகோ மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் கூறுகின்றன.

-o❢o-

b r e a k i n g   n e w s...