.

Tuesday, June 12, 2007

இந்தியா: முதல் குடிமகனாக யாருக்கு வாய்ப்பு அதிகம்?



குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் நெருங்கி விட்ட நிலையில், வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தள்ளப்பட்டுள்ளது.

அநேகமாக தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் சிவராஜ் பாட்டீல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.

சோனியா காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பாட்டீல், ஏற்கனவே மக்களவை சபாநாயகராக பதவி வகித்த அனுபவம் வாய்ந்தவர். மேலும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த லிங்காயத் பிரிவைச் சேர்ந்தவரான அவரது அரசியல் சட்ட அறிவு மற்றும் அனுபவத்திற்காக சோனியாவால் மிகவும் மதிக்கப்படுபவர்.

கர்நாடகம் மற்றும் கோரக்பூரில் மதவாத மோதல்கள் ஏற்பட்ட போது, கட்டுப்படுத்தத் தவறியதாக இடதுசாரிக் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

எனவே இடதுசாரிக் கட்சிகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பாட்டீலை மிக உயர்ந்த பதவிக்கு தகுதியானவராக ஏற்க மறுத்து வருகின்றன.

லத்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 7 முறை வெற்றிபெற்ற போதிலும், கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் பாட்டீல் தோல்வியடைந்தார்.

எப்படியிருப்பினும் இந்த வார இறுதிக்குள் வேட்பாளர் யார் என்பது தெரிந்து விடும்.

அதிக வாக்குகளை கைக்கொண்டுள்ள மாயாவதியும் ஐ.மு.கூ வுடன் இவ்விடயத்தில் 'உடன்பாடு' கண்டுள்ளதாகத் தெரிகிறது.

குடியரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்வதற்காக சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் ஆலோசனை நடத்துவதற்காக முதல் அமைச்சர் கருணாநிதி புதுடெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...