.

Tuesday, June 12, 2007

தமிழகத்தில் சிக்குன்குன்யா ?

குமரி மாவட்டத்தில் ஒருவர் பழி.

கேரள மாநிலத்தில் வேகமாக பரவிவரும் சிக்குன் குனியா நோயால் 70-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் கேரளாவை ஒட்டி தமிழக எல்லைகளில் உள்ள குமரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சிக்குன் குனியா பரவாமல் இருக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எல்லை பகுதிகளில் ஹெல்த் செக்போஸ்டுகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. கேரளாவில் இருந்து வரும் ரெயில் மற்றும் பஸ் உள்ளிட்ட வாகனங்களில் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. இந்தநிலையில் குமரி மாவட்ட பகுதிகளான அருமனை, மஞ்சாலுமூடு, களியக்காவிளை, பத்து காணி, ஆறுகாணி, அணை முகம், ஒருநூறாம் வயல், கடையாலுமூடு, குலசேகரம் ஆகிய இடங்களில் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் கை, கால் மூட்டுகள் மற்றும் விரல்களில் வீக்கம் ஏற்பட்டு அசையாத் தன்மை இருப்பதாக கூறுகிறார் கள். இவை சிக்குன்குனியா நோயின் அறிகுறியாக இருப்பதால் அந்த பகுதியில் சிக்குன்குனியா நோய் பரவி உள்ளதாக பொதுமக்கள் பீதி அடைந்து இருந்தனர். இந்தநிலையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த ஒருவர் நேற்று பரிதாபமாக இறந்தார். பத்துகாணியைச் சேர்ந்தவர் சசி (வயது 45). காய்ச்சலால் அவதிப்பட்ட இவர் காரைக்கோணத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதேபோல காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அரமன்னம் பகுதியைச் சேர்ந்த ராஜம் (33), சாந்தி (32), அரகநாடு பகுதியைச் சேர்ந்த அப்துல்சலாம் (45), மூவாற்றுமுகம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் (50), சிற்றாறு அரசு ரப்பர் கழக குடியிருப்பைச் சேர்ந்த பெரியசாமி (49), திருவரம்பைச் சேர்ந்த முத்தையன் (78) ஆகிய 6 பேர் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல கடையாலுமூடு பேரூராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்டோருக்கு சிக்குன்குனியா நோய் அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. நோய் தாக்கியவர்களில் 70 சதவீதம் பேர் கேரளாவில் இருந்து சிக்குன்குனியாவுடன் வந்தவர்கள் என்கிறார் கடையாலுமூடு பேரூராட்சித் தலைவர் ஜார்ஜ் ஸ்டீபன். அவர் கூறியதாவது:-ஆறுகாணி, பத்துகாணி, ஒருநூறாம்வயல், அணை முகம், நிரப்பு, கணபதிகல், மருதம்பாறை உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் கேரளாவில் ரப்பர் பால் எடுக்கும் தொழில், கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் பலர் தற்போது சிக்குன்குனியா தாக்கி சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர்.
அவர்கள் மூலம் இங்குள்ளவர்களுக்கும் நோய் பரவுகிறது. நேற்று நோய் தாக்கிய பத்துகாணியைச் சேர்ந்த சசி இறந்து விட்டார். அவர் சிக்குன் குனியா தாக்கி தான் இறந்துள்ளார். தனியார் ஆஸ்பத்திரியில் சசிக்கு சிக்குன் குனியா தாக்கி இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கான சான்றிதழ் தர மறுக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். சசி மரணத்தை தொடர்ந்து பத்துகாணி மற்றும் அதைச் சுற்றி வசிக்கும் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதற்கிடையே இன்று நாகர்கோவிலில் இருந்து 22 பேர் கொண்ட மருத்துவ குழு கடையாலுமூடு, பத்துகாணி பகுதிக்கு செல்கிறது. அங்கு வீடு-வீடாக சென்று அவர்கள் ஆய்வு செய்கிறார்கள். நோய் தாக்கியவர்கள் யார்-யார்ப அவர்களை தாக்கியது என்ன நோய்ப என்பது குறித்து மருத்துவ குழு ஆய்வு செய்கிறது. மேலும் அந்த கிராமங்களில் கொசு மருந்து அடிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

1 comment:

Anonymous said...

ayyyo ore kaali pannida vendiyathuthaan.

-o❢o-

b r e a k i n g   n e w s...