.

Tuesday, June 12, 2007

சிவாஜி - விற்பனை விவரங்கள்

'சிவாஜி' திரைப்படத்தின் சென்னை விநியோக உரிமைக்கு ஜீ.வி. பிலிம்ஸ் 52 கோடி கொடுக்கிறது. இதில் ஆறரை கோடியை அபிராமி திரையரங்க குழுமம் பங்களித்துள்ளது.

சிவாஜி படத்தின் டிவி உரிமைக்கு கலைஞர் டிவி ரூ. 6 கோடி கொடுத்திருக்கிறது.

கிட்டத்தட்ட 1000 பிரிண்டுகள் வரை இப்படத்துக்குப் போடப்பட்டிருக்கிறது. ஒரு பிராந்திய மொழிப் படத்துக்கு இதுவரை இந்த அளவுக்கு பிரிண்டுகள் போடப்பட்டதில்லை என்பதால் இது ஒரு சாதனை அளவாக கூறப்படுகிறது.

படத்தை மினிமம் கியாரண்டி முறையில் வாங்குமாறு ஏவி.எம். நிறுவனம் கூறியபோது அதை ஏற்க மறுத்த தியேட்டர் உரிமையாளர்களில் ஒரு பகுதியினர், பர்சன்டேஜ் அடிப்படையில்தான் படத்தை வாங்க முடியும் என்று முரண்டு பிடித்தனர். (சற்றுமுன்...: 'சிவாஜி' ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைப்பு)

இந்த நிலையில்தான் கலைஞர் டிவிக்கு சிவாஜி படம் விற்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்டதும் தியேட்டர்காரர்கள், ஏவி.எம். நிறுவனத்தை அணுகி, மினிமம் கியாரண்டி முறையிலேயே படத்தை வாங்கிக் கொண்டார்கள்.

ஆந்திராவில் வெளியாகும் தெலுங்குப் பதிப்புக்கு 15 கோடி தரப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு உரிமம் 12 முதல் 15 கோடிக்கு சென்றிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

சிவாஜியின் தயாரிப்புக்கு அறுபது கோடி செலவானது.

அபிராமி அரங்குகளில் எட்டரை மணி காலைக்காட்சிக்கு லேண்ட்மார்க் மூலமாக வாங்குபவர்களின் (ரூ. 300, 500 & 750) பணம் அனைத்தும் Ray of Light அமைப்புக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள்.

1. GV Films bags 'Sivaji' distribution rights for Rs 52 crore | Televisionpoint.com News
2. Shivaji Channel Rights sold for record price!
3. The Hindu : Tamil Nadu / Chennai News : A charity spin on `Sivaji'
4. Huge price for Sivaji rights

12 comments:

Anonymous said...

//'சிவாஜி' திரைப்படத்தின் சென்னை விநியோக உரிமைக்கு ஜீ.வி. பிலிம்ஸ் 52 கோடி கொடுக்கிறது.//

should be TN rights not chennai rights. chennai rights is for 6.5 crore bought by abirami ramanathan

VSK said...

ஜூன் 12-ம் தேதி பதிவுக்கு, மே 19 லிங்கா?

குசும்புதானே!

:))

ஜோ / Joe said...

//'சிவாஜி' திரைப்படத்தின் சென்னை விநியோக உரிமைக்கு ஜீ.வி. பிலிம்ஸ் 52 கோடி கொடுக்கிறது.//

கேக்குறவன் கேனையா இருந்தா கே.ஆர்.விஜயா கொண்டையில KTV தெரியுதுண்ணு சொல்லுவாங்களாம்.

Boston Bala said...

---should be TN rights not chennai rights. chennai rights is for 6.5 crore bought by abirami ramanathan---

இந்த மாதிரி செய்தியெல்லாம் அஃபிஷியலாக வெளியிடுமாறு வணிக நிர்ப்பந்தங்கள் இல்லாத நிலையை நீக்கலாம். வெளிப்படையான வர்த்தக விவரங்களை முன்வைத்தால் வருமான வரி ஏய்ப்பையும் தடுக்கும். பொது நிறுவனமாக பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்தால், வியாபாரங்களை அறிய முடியும்...

Boston Bala said...

---ஜூன் 12-ம் தேதி பதிவுக்கு, மே 19 லிங்கா?
---

நாங்க பழச மறக்கமாட்டோம் :P

Boston Bala said...

---கேக்குறவன் கேனையா இருந்தா கே.ஆர்.விஜயா கொண்டையில KTV தெரியுதுண்ணு ---

பார்க்கறவன் பாமரனா இருந்தா பாலு மகேந்திரா படத்தில ஃபாரின் படத்த பிடிச்சுடுவான்?

கொங்கு ராசா said...

எங்க இருந்து தான் இந்த 'புள்ளிவிவரம்' எல்லாம் அளந்து விடுறாங்களோ.. சாமிகளா..

எங்க ஏரியா யாருமே கடைசி வரை வாங்கல.. அதுனால மெட்ராஸ் ஆளுகலே தியேட்டர லீசுக்கு எடுத்து ஓட்ட முடிவு செஞ்சிருக்காங்க. (தியேட்டர் காரங்க யாருமே அவுட்ரைட், மினிமம் கேரன்டி, பர்சன்டேஜ் எந்த 'மாடல்'லயும் வாங்கல.. எனக்கு கோடி லாபமெல்லாம் வேண்டாம், தினமும் இவ்ளோ குடுத்துட்டு நீயே ஓட்டி சம்பாரிச்சுக்கோன்னு சொல்லி ஒதுங்கிட்டாங்க)

இப்படித்தான் இருக்கு நிசம்.. ஆனா 'புள்ளிவிவரம்' எல்லாம் பார்த்தா .. ரொம்ப 'விவரமா' இருக்கு.. ;)

பாண்டியன் / அதிசியப்பிறவி எல்லாம் அவுட்ரைட்ல வாங்கின ஆளு இதை வாங்காம ஒதுங்கிட்டாரு. :(

Anonymous said...

//---கேக்குறவன் கேனையா இருந்தா கே.ஆர்.விஜயா கொண்டையில KTV தெரியுதுண்ணு ---

பார்க்கறவன் பாமரனா இருந்தா பாலு மகேந்திரா படத்தில ஃபாரின் படத்த பிடிச்சுடுவான்? //

சற்றுமுன் வாசகர்கள் கேக்குறதுமில்ல, பாக்குறதுமில்ல.. வெபரமானவய்ங்க, சரியா வெளங்கிப்பாய்ங்க.

ஜோ / Joe said...

//---கேக்குறவன் கேனையா இருந்தா கே.ஆர்.விஜயா கொண்டையில KTV தெரியுதுண்ணு ---

பார்க்கறவன் பாமரனா இருந்தா பாலு மகேந்திரா படத்தில ஃபாரின் படத்த பிடிச்சுடுவான்?//

"'சிவாஜி' திரைப்படத்தின் சென்னை விநியோக உரிமைக்கு ஜீ.வி. பிலிம்ஸ் 52 கோடி கொடுக்கிறது." -ன்னு முட்டாள் தனமா எழுதிட்டு சப்பை கட்டு வேற .52 கோடிங்கிறது தமிழ்நாடு முழுவதுக்கும் .சென்னை-க்கு மட்டுமல்ல .சுட்டிக்காட்டிய பின்னரும் திருத்த துப்பில்ல .

உங்க ரஜினி பக்திக்கு 'சற்றுமுன்'-ன் நம்பகத்தன்மையை பலிகொடுக்க வேண்டாம்.

வவ்வால் said...

////கிட்டத்தட்ட 1000 பிரிண்டுகள் வரை இப்படத்துக்குப் போடப்பட்டிருக்கிறது. ஒரு பிராந்திய மொழிப் படத்துக்கு இதுவரை இந்த அளவுக்கு பிரிண்டுகள் போடப்பட்டதில்லை என்பதால் இது ஒரு சாதனை அளவாக கூறப்படுகிறது.//

பாலா,

சிவாஜி திரைப்படம் வருவதற்கு முன்னரே வதந்திகளின் அடிப்படையில் பத்திரிக்கைகள் தான் கண்டபடி செய்து போட்டு காசு பார்க்கிறார்கள் என்றால் நீங்களும் களத்தில் குதித்து வதந்திகளை பரப்புகிறீர்களே!

இந்தியாவிலேயே அதிகப்பிரதிகள் போடப்பட்ட படம் சிரஞ்சீவி நடித்த ஸ்டாலின் என்ற படத்திற்கு 600 பிரதிகள். சந்திரமுகி 300 பிரதிகள் அதுவே தமிழில் எடுக்கப்பட்ட படங்களில் அதிகம். ஆனால் சந்திரமுகியின் நிகர வசூல் சுமார் 100 கோடிக்கும் மேல் , முதல் ஒரு பில்லியன் மார்க் தமிழ் படம்(ஹிந்தியில் ஷாருக்கானின் தேவதாஸ்). எனவே தான் துபாயில் நடைப்பெற்ற இந்திய திரைபடங்களுக்கான திரைவிழாவில் இடம் பெற்றது.

1000 பிரதிகள் ஏன் சாதியமில்லை எனில் ஒரு பிரதி எடுக்க 5 லட்சம் செலவாகும் என்கிறார்கள் 1000 பிரதி எனில் சுமார் 50 கோடி பிரதி எடுக்கவே ஆகிவிடும் படத்தின் பட்ஜெட்டில் இந்த செலவும் அடக்கம், அப்போது படத்தின் மொத்த பட்ஜெட் தான் என்ன? 55 கோடியில் படம் எடுக்கப்பட்டு 75 கோடிக்கு விற்பனை ஆனதாக தெரிய வருகிறது.

ஹாலிவுட் படங்களுகு எல்லாம் சர்வ சாதாரணமாக 5000 பிரதிகள் கூட போடுவார்கள் காரணம் அங்கே எல்லாம் டிஜிட்டல் புரொஜெக்ஷன்,த்மிழகத்திலும் சத்யம்,அமிராமி, ராஜெஷ்வரி,ஐனாக்ஸ், பாண்டியில் ஆனந்தா ,மற்றும் சில மாநகராட்ச்சிகளில் அத்தகைய வசதி உள்ளது.

பின்குறிப்பு:-
இவை அனைத்தும் படித்தது ,கேட்டவையே எனவே இவையும் வதந்திகளாக இருக்கலாம்!

Boston Bala said...

---உங்க ரஜினி பக்திக்கு---

படம் விற்ற தகவலை சொன்னால், பக்தியா?


---"'சிவாஜி' திரைப்படத்தின் சென்னை விநியோக உரிமைக்கு ஜீ.வி. பிலிம்ஸ் 52 கோடி கொடுக்கிறது." ---

'GV Films has snapped up the Chennai distribution rights for Tamil mega star Rajinikanth's much-hyped flick, 'Sivaji'...' என்று ஆங்கிலத்தில் சொன்னதை மொழிபெயர்த்ததில் தவறு நிகழ்ந்ததற்கு வருந்துகிறேன்.

--- முட்டாள் தனமா எழுதிட்டு சப்பை கட்டு வேற---

புத்திசாலித்தனம் டெஃபினிஷன் ப்ளீஸ் ;))

Boston Bala said...

---நீங்களும் களத்தில் குதித்து வதந்திகளை பரப்புகிறீர்களே!---

நன்றி... உண்மைகளை தெளியும்வண்ணம் அமைவதில் மகிழ்ச்சியே :)

-o❢o-

b r e a k i n g   n e w s...