.

Tuesday, June 12, 2007

இந்தியா: விரைவில் பெட்ரோல் விலை உயர்வு.

கச்சா எண்ணையின் விலை சர்வதேச சந்தையில் 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்து விட்டது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே போவதால், பெட்ரோலியப் பொருட்களின் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டும் என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை வலிபுறுத்தி வந்தன. ஆனால் மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தாமல் இருந்து வந்தது.

இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாவிட்டால் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை தாங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள், அண்மையில் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன.


பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் ஆய்வு செய்யப்படும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

அதற்கு முன்பதாக எண்ணை நிறுவனங்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச மத்திய அரசு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகே பெட்ரோல், டீசல் விலையை எவ்வளவு உயர்த்துவது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...