.

Tuesday, June 12, 2007

கருணாநிதி இன்று டெல்லி பயணம்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து இறுதி செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்த முதல்வர் கருணாநிதி இன்று மாலை டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் சிவராஜ் பாட்டீலை நிறுத்த காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இந்த முடிவை ஏற்க வேண்டுமானால் சோம்நாத் சாட்டர்ஜிக்கு குடியரசுத் துணைத் தலைவர் பதவியை தர வேண்டும் என இடது சாரிகள் நிபந்தனை விதித்துள்ளன. இந்த நிலையில், பாட்டீலுக்கு கூட்டணிக் கட்சிகளிடையே ஒருமித்த ஆதரவைத் திரட்ட காஙகிரஸ் முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக ஆலோசிக்க முதல்வர் கருணாநிதி இன்று மாலை டெல்லி செல்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் அவர் ஆலேசானை நடத்துகிறார். முதல்வருடன் துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி உள்ளிட்ட 9 பேர் செல்கின்றனர்.15ம் தேதி வரை டெல்லியில் தங்கவுள்ளார் கருணாநிதி. அப்போது பிரதமர், சோனியா ஆகியோருக்கு கனிமொழியை அறிமுகமும் செய்யவுள்ளார். தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு 15ம் தேதி இரவு சென்னை திரும்புகிறார் முதல்வர் கருணாநிதி.

குடியரசு தலைவர் பற்றி ஜெயலலிதா கூறுகையில் ... குடியரசுத் தலைவர் தேர்தலில் பைரான் சிங் ஷெகாவத் சுயேச்சையாக களம் இறக்கப்பட்டால், அவரை ஆதரிக்கலாம் என 3வது அணி தலைவர்களிடம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறி வருவதாக தெரிகிறது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...