.

Wednesday, June 27, 2007

'ஒரு ஷெகாவத்தால் மட்டுமே மற்றொரு ஷெகாவத்துக்கு எதிராக போட்டியிட முடியும்'

பிரதிபா பாட்டீலும், ஷெகாவத் இனத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்திருப்பதால் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலை இரு ஷெகாவத்துக்களுக்கு இடையேயான மோதலாக எடுத்துக் கொள்ளலாமா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு பைரோன் சிங் ஷெகாவத் பதிலளித்தார்.

'பிரதிபா, ஒரு ஷெகாவத் அல்ல' என்று கூறியுள்ள பைரோன் சிங் ஷெகாவத், 'அவருக்கு எதிராக நான் இதுவரை எதுவும் கூறவில்லை; இனிமேலும் கூறப்போவதில்லை. யாராவது அவரைப் பற்றி குறை கூறினாலும் அதை நான் கண்டு கொள்ளப்போவதும் இல்லை. நான் இவ்வாறு நடந்த கொள்வதற்கு அவர் ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்தவர் என்பது காரணமல்ல; அவர் பெண் என்பதே காரணம்' என்றார்.

எனினும், இத் தேர்தலை ஷெகாவத்துகளுக்கு இடையேயான போட்டியாக வர்ணித்த காங்கிரசுக்கு நன்றி தெரிவித்த ஷெகாவத், 'இது ஷெகாவத் சமூகத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறது. ஒரு ஷெகாவத்தால் மட்டுமே மற்றொரு ஷெகாவத்துக்கு எதிராக போட்டியிட முடியும் என்பதற்கு இதுவே சான்று' என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஷெகாவத் சமூகத்தைச் சேர்ந்த தேவி சிங் ஷெகாவத்தை பிரதீபா திருமணம் செய்திருக்கிறார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, இத் தேர்தல் இரண்டு ஷெகாவத்துகளுக்கு இடையேயான போட்டியாக இருக்கப் போகிறது என பிரதிபா அறிவித்தார்.

தினமணி

1 comment:

Boston Bala said...

'ஏதோ அமெரிக்க அதிபர் தேர்தலைப் போன்று, இந்தியாவில் குடியரசுத் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதாகக் கருதிக் கொண்டு, பிரதிபாவுக்கு எதிராக அவதூறுப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மட்டும் வாக்களித்தால் போதும் என்பதை எதிர்க்கட்சிகள் உணரவேண்டும்' என தாஸ் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி கூறினார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...