.

Wednesday, June 27, 2007

அமெரிக்கா:இந்திய வம்சாவளியால் பள்ளியில் இடமில்லை

சமூகநீதிக்காக இடப்பட்ட நீதிமன்ற தீர்ப்பொன்றினால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு புகழ்பெற்ற பள்ளியில் இடம் கிடைக்கவில்லை.
நியூயார்க்கின் கோனி தீவிலுள்ள மார்க் ட்வைன் பள்ளி திறமையுள்ள மாணவர்கள் மிக விரும்பும் பள்ளியாகும். இங்கு நடந்த நுழைவுத்தேர்தலில் 77 மதிபெண்கள் பெற்றும் நிகிடா ராவ் என்ற சிறுமிக்கு அவள் சிறுபான்மை இனத்தினர் என்ற வகையில் அதிகம் மதிப்பெண்கள் பெற வேண்டியதாயிருக்கிறது. 1974 இல் வெளியான ஒரு நீதிமன்ற தீர்ப்பின்படி நடக்கவேண்டியுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். சிறுபான்மையினரின் தொகையை கூட்டுவதற்காகவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பினும் நிகிடாவிற்கு இது தடங்கலாக உள்ளது.

இதுபற்றி மேலும்...Race comes between Indian girl & NY school - Daily News & Analysis

3 comments:

மணியன் said...

இந்த செய்தி முழுவதும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு என்றால் cutoff mark குறைவாக இருக்கவேண்டும் அல்லவா ? அமெரிக்க வாழ் பதிவர்கள் விளக்க முடியுமா ?

Boston Bala said...

---The judge had allocated 60 per cent seats to the whites and 40 per cent to the minority students.---

அமெரிக்க 'மாநகரங்களில்' பள்ளியின் தரம் கொஞ்சம் தாழ்ந்தே காணப்படும்.

சிகாகோ, பாஸ்டன் போன்ற நகரங்களில் (மையப்பகுதிகளில்) பெரும்பாலும் வசதி குறைந்தவர்கள் வசிப்பது முதல் காரணம். பணம் படைத்தோர், ஒதுக்குப்புறமாக (அண்ணாநகர், அடையார் மாதிரி) தோட்டத்துடன் கூடிய பங்களா வீடுகளுக்கு சென்று விடுவதால், புறநகர் பகுதிகளில் மட்டுமே உயர்தரமான பள்ளிகள் கிடைக்கிறது.

இரண்டாவது காரணமாக நகரத்தில் காவல்துறை பாதுகாப்பு போன்ற இன்ன பிற செலவுகள் அதிகமாகத் தேவைப்படுவதால், வரியை பிய்த்துக் கொள்ள பலர் போட்டி போடுகிறார்கள். இதனால், அரசு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு மிகக் குறைவாகவே இருக்கும். இதனால், ஆசிரியர் சம்பளமும் கம்மி. புறநகரில் ரோந்து தேவைகள் அதிகமில்லை என்பதால் கணினியும் நல்ல நூலகமும் கொண்ட க்வாலிடி பள்ளிக்கூடங்களுக்கு வாய்ப்பு அதிகம்.

மெட்ரோவில் வசிப்பவர்களின் கதி?

குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியை வேன்டுவோர் தனியார் பள்ளியை நாடுகின்றனர். இது கொஞ்சம் செலவு அதிகமாகும். மாதத்திற்கு இரண்டாயிரம் டாலரைத் தாண்டலாம்.

தினக்கூலிக்கு மெக்டோனால்ட்ஸில் வேலை செய்பவர்களால் இது நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவர்கள் அரசினர் பள்ளிக்கூடத்தையே நாடுவார்கள்.

குறிப்பிட்ட பள்ளியைக்் குறித்து தேடிப் பார்த்தபோது அது பட்டியலில் உயர்தரத்தில் இருப்பதால்தான் இந்தப் பிரச்சினை எழுந்திருப்பது தெரியவருகிறது. சாதாரண ரகமாக இருந்திருந்தால் வழக்கு தொடுத்து விண்ணப்பத்தை ஒப்புக் கொள்ளும்படி வற்புறுத்தியிருக்க மாட்டார்.

தனியார் பள்ளியில் போடுவதில் உள்ள மாதாந்திர (பன்னிரென்டு வருட) செலவை விட, வக்கீல் ஃபீஸ் குறைவு.

---She was classified as minority and needed a score of 84.4 to be accepted but white students with scores of 77 were admitted.---

இந்த நிலையைத் தடுக்க பாஸ்டன் மாநகரப் பள்ளிகளில் சீட்டு குலுக்கல் முறையை உபயோகிக்கிறார்கள். மொத்தம் உள்ள நூற்றுக்கணக்கான கல்விக்கூடங்களில், இரண்டு/மூன்று மட்டுமே மிகச் சிறப்பானவை. அவற்றில் நுழையவதற்கு தேர்வு கிடையாது. லாட்டரி அடித்தால் யோகம். இல்லாவிட்டால் பிறிதொரு பள்ளி என்னும் நடைமுறை.

Boston Bala said...

Think Progress » BREAKING: Supreme Court Strikes Down Public School Desegregation Law

-o❢o-

b r e a k i n g   n e w s...