.

Wednesday, June 27, 2007

'கதை எனக்கு சொந்தமானது சிவாஜி படத்துக்கு தடை விதிக்க வேண்டும்': நெல்லை சினிமா பிரமுகர் வழக்கு

ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடித்து பரபரப்பாக ஒடிக்கொண்டிருக்கும்படம் சிவாஜி. இந்த படத்தின் கதைக்கு நெல் லையை சேர்ந்த சினிமா உதவி டைரக்டர் சுடலைக்கண்ணு என்கிற ஜெயராஜதேவன் சொந்தம் கொண்டாடியுள்ளார்.

அவர் சென்னை நகர சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியி ருப்பதாவது:-

நான் சினிமா துறையில் பிரபலமாகும் ஆசையில் ஒரு கதையை டைரக்டர் ஷங்கருக்கு அனுப்பி இருந்தேன். அதை 'சிவாஜி' படத்தின் கதையாக பயன்படுத்தி உள்ளார்.

இந்த கதையை ஷங்கருக்கு நான் அனுப்பியது தொடர் பாக எங்களிடையே கடிதப்போக்குவரத்து நடந்துள்ளது. நான் அனுப்பிய கதையை `சிவாஜி' படத்துக்கு பயன்படுத்தியது குறித்து டைரக்டர் ஷங்கர் என்னிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை. அது நான் எழுதிய கதை.

எனவே கதையை நான் எழுதியதாக குறிப்பிட வேண்டும் என் அனுமதி பெறா மல் 'சிவாஜி' படத்துக்கு எனது கதையை பயன்படுத்தியது தவறு. வாக்குறுதியை மீறி ஷங்கர் நடந்துள்ளார். எனவே என் பெயரை குறிப்பிடும் வரை சிவாஜி படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று 4வது நகர உதவி சிவில் கோர்ட்டில் நீதிபதி விஜயேந்திரராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து பதில் மனு தாக்கல் செய்யும்படி டைரக்டர் ஷங்கர், ஏவிஎம் நிறுவனம் ஆகியவற்றுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தர விட்டார். வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது.

மாலைமலர்

8 comments:

G.Ragavan said...

அந்த நபர் சொல்றது பொய்யாத்தான் இருக்கனும். ஏன்னா படம் பாத்தவங்க அதுல கதையே இல்லைன்னு சொல்றாங்களே. இல்லாத கதையை எப்படித் திருட முடியும்!!!!!

மணிகண்டன் said...

என்னாது சிவாஜி படத்தோட கதையா? நல்ல காமெடி :)

சிறில் அலெக்ஸ் said...

அப்டி பாத்தா ஷங்கரோட பழைய படத்தின் கதையெல்லாம் இவரோடதுதானா? ஏன்னா சிவாஜி கதையில என்ன புதுசா இருக்குது?

லிவிங் ஸ்மைல் said...

என்னப்பா பின்னூட்டம் போடலாம்னு பாத்தா எல்லாம் முந்திகிட்டிங்க...


இல்லாத ஒன்ன வச்சு கேஸ் போட்டா, அந்த நீதிபதியோட கதி...!

அநேகமாக அந்த தீர்ப்பும் படு காமிடியா இருக்கும்னு எதிர்பார்க்கலாம்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

படத்திற்கு மேலும் பப்ளிசிட்டிக்கு கிடைக்கப் போகிறது.. ஏற்கெனவே படத்தின் சண்டைக் காட்சிகளில் கிராபிக்ஸ் செய்த வல்லுநர் பீட்டர் என்பவர் அதை வெளியில் சொல்லப் போய்.. அடுத்த நாளே அந்தக் கம்பெனியுடன் ஏவி.எம். மல்லுக்கு நிற்க.. கிராபிக்ஸ் வல்லுநருக்கு அடுத்த நிமிடமே சீட்டுக் கிழிந்து விட்டது. பாவம்.. பெருமையாகச் சொல்லப் போய் இருந்த வேலையும் போய்விட்டது இந்த அப்பாவிக்கு..

மனதின் ஓசை said...

ஷங்கர் + ரஜினி + AVM கூட்டுச்சதி:

சிவாஜி படத்தில் கதை இல்லை என கூறப்படுவதால் அதனை சமாளிக்க ஜெயராஜதேவன் என்பவர் மூலம் கதை தன்னுடையது என ஜோடனையான ஒரு வழக்கை போட வைத்துள்ளனர். இதன் மூலம் சிவாஜி படத்தில் கதை உள்ளது என மக்களை நம்ப வைத்து ஏமாற்றுகிறார்கள். ஏமாலி தமிழனுக்கு என்றுதான் விழிப்பு வருமோ?

இப்படி ஒரு பதிவு வந்திருக்க வேண்டியது.. அதுக்குள்ள நீங்க செய்திய கொடுத்து கெடுத்துட்டீங்க
:-))))

சிவகுமார் said...

யாருமே இல்லாத டீ கடையில அந்த நபர் டீ ஆத்த முயற்சி செய்றார்ப்பா!

Anonymous said...

இந்த கேஸயல்லாம் விசாரனைக்கு எடுத்தா அப்றம் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்காம என்ன செய்யும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...