.

Thursday, June 28, 2007

பயங்கர வெடிப்பொருட்களுடன் தீவிரவாதிகள் கைது.

பெரியகுளம் அருகே ரகசிய ஆயுத பயிற்சியில் ஈடுபட்டு பிடிபட்ட தீவிரவாதிகளுக்கு ஆந்திர நக்சலைட்டுகளுடன் உள்ள தொடர்பு அம்பலம் ஆகி உள்ளது.

துப்பாக்கிகளுடன் தீவிரவாதிகள்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே துப்பாக்கிகளுடன் 3 தீவிரவாதிகள் பிடிபட்டனர்.முருகமலை கரடு என்று அழைக்கப்படும் பகுதியில் பதுங்கி இருந்த அவர்களை கிராம மக்கள் உதவியுடன் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களுடன் இருந்த 7 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
சட்டக்கல்லூரி மாணவர் பிடிபட்ட தீவிரவாதிகள் பெயர் விவரம் வருமாறு:-
1. வேல்முருகன் (வயது 19). பெரியகுளம் வெ.புதுக்கோட்டையை சேர்ந்தவர். மதுரை சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர். 2. பழனிவேல் (26). சேலம் சின்னனூரை சேர்ந்தவர். 3. முத்துச்செல்வம் (22). திருச்சி பாலிடெக்னிக்கில் மின்னணுவியல் பட்டய படிப்பு படித்தவர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.


ஆயுத பயிற்சி

பிடிபட்ட 3 தீவிரவாதிகளிடமும் உயர் போலீஸ் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், துப்பாக்கி- வெடிகுண்டு தயாரிப்பு மற்றும் ஆயுத பயிற்சி பெறுவதற்காக அவர்கள் முருகமலை கரடு பகுதிக்கு வந்ததாக தெரிய வந்தது. வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஆந்திர தீவிரவாதிகளின் உதவியுடன் மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களில் கரட்டு பகுதிக்கு அவர்கள் கடத்தி வந்து இருக்கிறார்கள். கொடைக்கானல் மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இதேபோல் ஆயுத பயிற்சி முகாம்கள் ஏற்கனவே நடந்துள்ளன.
சிறையில் அடைப்பு தப்பி ஓடிய 7 தீவிரவாதிகளின் பெயர் ராஜா, ரமேஷ், சுரேஷ், பிரபு, பிரகாஷ், சங்கர் மற்றும் இன்னொரு சுரேஷ் என்றும், முருகமலை கரடு பகுதியில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளுக்கு ராஜா தலைவராக செயல்பட்ட தகவலையும் அவர்கள் தெரிவித்தனர். பிடிபட்ட வேல்முருகன் உள்பட 3 தீவிரவாதிகளுக்கும் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் அவர்கள், மாஜிஸ்திரேட்டு சிங்கராஜ் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டு அவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 11-ந் தேதி வரை காவலில் வைக்கும்படி, மாஜிஸ்திரேட்டு சிங்கராஜ் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, 3 பேரும் பெரியகுளம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்
.

1 comment:

சந்திப்பு said...

நக்சலிசம் ஒரு அரசியல் இயக்கமல்ல. அரசியல் சக்தியல்ல என்பதற்கு மேலும் ஒரு உதாரணமாகவே தேனி சம்பவம் வெளிப்படுத்துகிறது. அது இந்திய நாட்டில் சதித் திட்டத்தின் மூலமே புரட்சியை வரவழைக்கலாம் என கனா காணுகிறது. மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு நடத்தப்படும் எந்த இயக்கமும் சீர்குலைவு பாதைக்கே செல்லும். அதைத்தான் தற்போதும் இந்த இயக்கம் நிரூபித்துள்ளது. இத்தகைய சதித்திட்ட அமைப்புகளை மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள். அவர்களது செயல் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவானது. அதாவது கம்யூனிச பயங்கரவாத பூச்சாண்டியை தொடர்ந்து காட்டுவதற்கு இவர்களது சாகசவாதம் பயன்படுகிறது. மொத்தத்தில் இந்த நக்சலைட்டுகள் கம்யூனிசத்திற்கே எதிரானவர்கள்.

-o❢o-

b r e a k i n g   n e w s...