.

Thursday, June 28, 2007

காவல்துறையை இடையூறின்றி இயங்க விடுக : இராம்தாஸ்

மதுரையில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது பாமக தலைவர் இராம்தாஸ் காவல்துறை அரசியல் தலையீடு இன்றி சுதந்திரமாக செயல்பட்டு குற்றங்களை அடுத்த மூன்று வருடங்களுக்குள் குறைக்கவேண்டும், தமிழகம் மீண்டும் அமைதிப் பூங்காவாக திகழ வேண்டும் எனக் கூறினார். காவல்துறையின் கல்லீரல் அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்டுவிட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறியதை ஒட்டி தற்போது அது(ஈரல்) முழுவதும் கெட்டுவிட்டதாகக் கூறினார். காவலர், குற்றவாளிகள், அரசியல்வாதிகள் இவர்களிடையே இருக்கும் கூட்டே சென்னை போன்ற நகரங்களில் கொலை, கொள்ளை குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் என்றும் அவர் கூறினார். திட்டமிடப்பட்டு செய்யப்படும் கொலைகளை விரைவில் புலனாய்வு செய்ய தனிப்படை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் மீதான குற்றங்களை விசாரித்து உடனடி தீர்ப்பு வழங்க மகாராட்டிரத்தில் உள்ளதுபோல திட்டமிட்ட குற்றங்கள் ஒழுங்குச் சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

The Hindu News Update Service

2 comments:

மணியன் said...

ஓ!

Anonymous said...

ராமதாஸ் தன் கட்சியில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள், மற்றும் பல வழக்குகளில் சம்மந்தப்பட்டு இன்னும் சட்டத்தை ஏமாற்றி கொண்டிருப்பவர்களை சட்டத்தின் முன் சரன்டைய சொல்வாரா? வாய் இருக்கிறது பேச முடிகிறது அதையும் சிலர் கேட்கிறார்கள் என்பதற்காக ஏதோ இவர் மகாத்மா காந்தி போல் நினைத்துக் கொண்டு பேச கூடாது.

-o❢o-

b r e a k i n g   n e w s...