.

Monday, July 9, 2007

'ஏழை' எம்.பி.பி.எஸ். ரூ. 2.55 லட்சம்

சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அரசு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு தலா ரூ. 3 லட்சத்தை கட்டணமாக நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏழை மாணவராக இருந்தால் இந்தக் கட்டணத்தில் 15 சதவீத சலுகையை அளிக்க வேண்டும் என்று செட்டிநாடு கல்லூரி நிர்வாகத்துக்கு ராமன் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. ஆனால், மாணவரை ஏழை என நிர்ணயிக்கப்போவது எது என்பதற்கு அரசு அறிவிப்பில் விளக்கம் இல்லை. அப்படியே 'ஏழை' என ஒரு மாணவருக்கு கல்லூரி நிர்வாகம் சலுகை அளித்தாலும்கூட, அந்த மாணவர் ரூ. 45 ஆயிரம் தள்ளுபடியைப் பெற்று ரூ. 2.55 லட்சத்தை கட்டணமாகச் செலுத்தியாக வேண்டும்.

தினமணி

1 comment:

Unknown said...

இந்த சுயநிதி கல்லூரிகளை அனுமதிக்கும்போதே 30% சீடுகளுக்கு மிகக்குறைந்த கட்டணத்தைத்தான் நிர்ணயிக்க வேண்டும் என்கிற மாதிரி ஏதாவ்து ரூல்சை போடமுடியாதா?

-o❢o-

b r e a k i n g   n e w s...