.

Monday, July 9, 2007

வாக்களிப்பதை புறக்கணித்தல் தேர்தல் விதிமீறல்: முன்னாள் தேர்தல் கமிஷனர்

குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது அணி, தங்களது எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை வாக்களிப்பதை புறக்கணிக்க அறிவுறுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவ்வாறு செய்தால் அது தேர்தல் விதிமீறலாக அமையும் என முன்னாள் தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியது:

அரசியல் கட்சிகள் பதிவு செய்து கொள்ளும் போது, 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், பிரிவு 29-ன் படி, உள்கட்சி ஜனநாயகத்தை காப்பதற்கான உறுதியளிக்கின்றன. தேர்தலில் வாக்களிப்பதென்பது ஜனநாயகக் கடமை. அதை பூர்த்தி செய்வது கட்சிகளுக்கு அவசியமான ஒன்று.

இதுதவிர்த்து, கட்சிகள் தங்களது உறுப்பினர்களை தேர்தலில் வாக்களித்தலை புறக்கணிக்க அறிவுறுத்தினால் அது தேர்தல் விதிமீறல் மட்டுமல்ல; இந்தியத் தண்டனைச் சட்டப்படி தண்டனைக்குரியதாகும்.

அதேபோல, குடியரசுத் தலைவர் தேர்தலில் கட்சிகள் தங்களது வாக்காளர்களின் முக்கியத்துவத்தை ஒரு வேட்பாளருக்கு மேல் தெரிவிக்கக்கூடாது என்று வழிகாட்டுதலும் தேர்தல் விதிமீறல் என்றார் கிருஷ்ணமூர்த்தி.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...