கடந்த 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், விதிமுறைகளை மீறி 4 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் இன்று வழக்குப் பதிவு செய்தது.
தி மு க வின் வட சென்னை எம்.பி செ.குப்புசாமி இது தொடர்பாக தொடந்திருந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இதுகுறித்த வழிகாட்டும் ஆணையை கடந்த ஜூன்13ல் பிறப்பித்திருந்தது.
புதுக்கோட்டை, புவனகிரி, ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி என்ற நான்கு தொகுதிகளில் போட்டியிட ஜெயலலிதா தனித்தனியாக அப்போது மனு தாக்கல் செய்திருந்தார்.
புதுக்கோட்டை மற்றும் புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரிகள் அடுத்துள்ள நகர நீதிமன்றங்களில் இவ்வழக்கை இன்று தொடந்துள்ளனர்.
TOI
Monday, July 9, 2007
ஜெ.க்கு எதிராக வழக்கு தொடர்ந்தது தேர்தல் ஆணையம்.
Posted by வாசகன் at 10:40 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
முதலில் புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி செல்வமணி, சிதம்பரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் புவனகிரி தொகுதிக்குட்பட்ட கோர்ட்டில்தான் மனு தாக்கல் செய்ய முடியும் என்று கூறிய நீதிபதி வசந்தி அந்த மனுவை இங்கு விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறினார்.
ஆனால் அதை ஏற்காமல் செல்வமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இங்குதான் தாக்கல் செய்வோம் என்று வாதாடினார். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி வசந்தி, இந்த மனுவை பரங்கிப்பேட்டை நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிடுகிறேன் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து செல்வமணியும், அவரது வழக்கறிஞரும் பரங்கிப்பேட்டை நீதிமன்றத்திற்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் போனபோது கோர்ட் நேரம் முடிந்து விட்டது.
இதனால் இன்று மனு தாக்கல் செய்ய முடியாது என்று நீதிபதி பிருந்தா தேவி கூறி மனுவைப் பெற மறுத்தார். இதையடுத்து செல்வமணியும், வக்கீலும் சென்றனர்.
ஆனால் இரவில் மனுவை ஏற்கலாம் என நீதிபதி பிருந்தாதேவிக்கு உத்தரவு வந்ததால் அவர் மனுவை ஏற்றார். விசாரணையை ஆகஸ்ட் 9ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
thats tamil
Post a Comment