.

Monday, July 9, 2007

தில்லியில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து 25 பேர் காயம்,ஒருவர் மரணம்

தலைநகர் தில்லியின் போக்குவரத்ட்துவிதிகளை மதிக்காத நீல வரி (Blueline) வண்டிகளின் உரிமத்தை இரத்து செய்யவிருக்கும் நேரத்தில் அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து ஒருவரின் மரணத்திலும் 25 மாணாக்கர்களுக்கு காயத்திலும் முடிந்துள்ளது. கேந்திரிய வித்யாலயா, கார்காடூமா பள்ளிச் சிறார்களை ஏற்றிக்கொண்டு சென்ர அந்த பேருந்து காலை 8 மணிக்கு விகாஸ் மார்கில் கவிழ்ந்தது. சுலைமான் என்ற 50 வயது பொறுப்பாளர் விபத்தில் பலியானார். வண்டியின் ஓட்டுனர் பேருந்தை விட்டு ஓடிவிட்டார். காயமடைந்த மாணவர்களை லால் பகதூர் மருத்துமனையில் அனுமதிக்கப் பட்டனர். 18 பேர் முதலுதவியுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இது பற்றி...IBNLive.com > Delhi school bus overturns, bluelines get the axe : school bus, children, accident

1 comment:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இது நீல வரி பேருந்து இல்லை..

மெட்ரோவின் ஷட்டில் வண்டி மினி பஸ். சட்டத்துக்குபுறம்பாக இதை பள்ளிக்காக குழந்தைகள் ஏற்றி செல்ல உபயோகித்திருக்கிறார்கள்...

-o❢o-

b r e a k i n g   n e w s...