.

Thursday, July 26, 2007

விருந்தினர் மாளிகையில் திடீர் பவர்கட்: கலாம் தவிப்பு

சென்னை, ஜூலை 26-

கார் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணா பல்கலைக்கழ்கத்திற்கு கலாம் சென்றார். பாதுகாப்பு அதிகாரிகளும் அவருடன் இருந்தனர். விருந்தினர் மாளிகையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு இரவு 11 மணிக்குச் சென்றார். பின்னர் அறையில் இருந்த நைட் லேம்ப்பை ஆன் செய்தார். அப்போது, திடீரென்று கரன்ட் கட்டானது. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட தமிழக அரசு அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சிடையந்தனர்.


பதறிப்போன பாதுகாப்பு அதிகாரிகள் உடனே கலாமை சூழ்ந்து கொண்டு அவரை பத்திரமாக வெளியே அழைத்து வந்தனர். தொடர்ந்து அங்கு தங்க வேண்டாம் என்று கூறி ராஜ்பவனில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, உடனே அவர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னாள் குடியரசு தலைவரும், அணுசக்தி விஞ்ஞானி என்பதாலும் அவருக்கு இசட்பிளஸ் என்ற உயர் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் மின்தடை, அதிகாரிகளுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியது. உடனே நடத்தப்பட்ட விசாரணையில், கலாமுக்கு ஒதுக்கப்பட்ட அறை கொண்ட கட்டிடம் பழமையானது. அவரது வருகைக்காக கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. அவருக்கு தேவையான மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தியவர்கள், மின்சார கேபிள் வயர்கள் பழுதடைந்ததை கவனிக்கவில்லை.


மேலும் நேற்று கலாம் வருகிறார் என்பதால் பல்கலை. வளாகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஓவர்லோடு காரணமாக வயர்கள் எரிந்து கரன்ட் கட்டாகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பவர்கட் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திக்கு தமிழ் முரசு

6 comments:

Boston Bala said...

நம்ம வீட்டுல மின் தடை வந்தா, கூரை ஒழுகினா எந்த செய்திப் பத்திரிகை கண்டுக்குது? :)

சிவபாலன் said...

எனக்கு தெரிந்து (பத்திரிக்கைகளில் பார்த்த புகைப்படங்களை வைத்து சொல்கிறேன்), விருந்தினர் மாளிகையை மிகத் தாமதமாகத்தான் சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. அவசர அவசரமாக செய்துள்ளனர். அதுவும் பெயின்ட் வாசனை நீங்கவே ஒரு வாரம் ஆகும். அப்படி இருக்க இவர்கள் எல்லாம் இரு தினங்களுக்கு முன் தான் பெயின்ட் அடிக்கிறார்கள்.
நாட்டின் உயர் பதிவியில் இருந்தவரை நல்லபடியாக கவனிப்பது மிக முக்கியம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

சிவபாலன் said...

பாபா

சீக்கிரமே முக்கிய பதிவி வகிக்க வாழ்த்துக்கள்! :)

Boston Bala said...

---நல்லபடியாக கவனிப்பது மிக முக்கியம். ---

ஒரு ஜெனரேட்டர்/இன்வர்ட்டர் இருந்தாப் போதுமே ;)

சிவபாலன் said...

பாபா

செய்தியை முழுமையா படிக்கவில்லையா? :)

அது பழைய கட்டிடம். அதனால் எலெடிரிக் வொயர்கள் எல்லாம் பழுதடைந்துவிட்டது. அதனால் ஜெனரேட்டர் இருந்தாலும் பிரயோசனமில்லை..

பொறியாளர்கள் நிறைந்த இடத்தில் இப்படி ஒரு அவலம். நினைக்கவே கேவலமாக இருக்கிறது.

Boston Bala said...

---எலெடிரிக் வொயர்கள் எல்லாம் பழுதடைந்துவிட்டது. அதனால் ஜெனரேட்டர் இருந்தாலும் பிரயோசனமில்லை---

ஓ... இதுக்குத்தான் பள்ளிக்கூடத்தில் அறிவியல் ஒழுங்கா படிங்கறாங்களா! :)

-o❢o-

b r e a k i n g   n e w s...