.

Sunday, July 8, 2007

தொடர்ந்து ஐந்தாவது முறையாக விம்பிள்டனை வென்றார் ரோஜர் ஃபெடரர்

ரோஜர் ஃபெடரர் 7-6 (9-7), 4-6, 7-6 (7-3), 2-6, 6-2 என்ற செட் கணக்கில் ரஃபேல் நடாலை வீழ்த்தி விம்பிள்டனை வென்றார். ஃபெடரருக்கு இது பதினொன்றாவது கிரான்ட் ஸ்லாம் வெற்றியாகும்.

2003 -ல் வெல்ல ஆரம்பித்தவர் ஐந்தாண்டுகளாகத் தொடர்ச்சியாக வாகை சூடி போர்க் (Bjorn Borg) -இன் சாதனையை சமன் செய்திருக்கிறார்.

Five for Federer: Swiss star wins Wimbledon - 07/08/2007 - MiamiHerald.com

5 comments:

மணியன் said...

ரோஜருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் !! ஐந்து முறை தொடர்ச்சியாக வென்றது சிறப்பே ஆகும்.
இரஷ்யா இராமநாதனுக்கு இப்போது மகிழ்ச்சியாயிருக்கும் :)

Boston Bala said...

எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சாய்ந்திருக்கக் கூடிய போட்டி. இரண்டு முறை 15-40 என்று கடைசி செட்டில் பின்தங்கியிருந்தாலும், சமாளித்து முன்னேறினார்.

நடுநடுவே மரக்கட்டையில் இதே வேகத்தைக் காண்பித்த போர்க்-குக்கு நிகர், போர்க்-தான் என்று ஒப்புமை செய்து கொண்டிருந்தார்கள். (FEDERER v BORG HEAD TO HEAD)

அதிர்ஷ்டம் என் பக்கம் அடித்தது என்று பெருந்தன்மையாக (Wimbledon: Roger Federer says luck helped him beat Rafael Nadal | Wimbledon 2007 | Guardian Unlimited Sport) பேட்டியளித்தாலும், மிக சிறப்பான செர்வ் & தோல்வியில் துவளாத ஆட்டம்.

Anonymous said...

இருவரின் ஆட்டமும் சிறப்பாக இருந்தது. அதிர்ஷ்டம் காரணம் இல்லை. பெடரரின் திறமையும், அனுபவமும், நாடல் காயமுற்றதும் வெற்றிக்கு வழி வகுத்தது. இருவரும் அடுத்த வருடம் இறுதிப் போட்டியில் ஆடினால் முடிவு எவ்வாறு இருக்குமோ?

Radha Sriram said...

அட்டகாசமான ஆட்டம்....கண்களுக்கு விருந்து இரண்டு பேரும் சளைக்காமல் விளையாடினார்கள்....ராஜருக்கு(ரோஜர்!!)
புல் தரை என்பதால் ஒரு சிறு edge இருந்தது என்றே தோன்றுகிறது, ரஃபேலுக்கு களி மண் போல்.....U>S open hard courtல் எப்படி விளையாடுகிறார்கள், இரண்டு பேரும் என்றூ பார்க்க ஆவலாக இருக்கிரேன்.....ராமனாதன்...where are you??
மெக்கென்ரோ சொன்னது போல் ஒரு நல்ல ரைவல்ரி உருவாகியுள்ளது.....
ட்ஜொகொவிச்ச்சும்....நன்றாக முன்னேறி வருகிறார்.....

சிவபாலன் said...

// 7&6(9/7), 4&6, 7&6(7/3), 2&6, 6&2 //

It seems very hot game!

Can some give the link for the video. I want to watch that game! pls!

-o❢o-

b r e a k i n g   n e w s...