.

Thursday, June 21, 2007

கிரிக்கெட்: 'உள்விவகாரங்கள் வெளிப்படுத்தாதீர்' - BCCI

கிரிக்கெட் வீரர்களுக்கு வாரியம் அறிவுரை

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சேப்பல் இருந்த போது, பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. கங்குலி மீது அவர் புகார் கூறி கிரிக்கெட் வாரியத்திற்கு ரகசியமாக அனுப்பிய 6 பக்க இ-மெயில், எப்படியோ கசிந்து விட்டது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் வெடித்தன. இதே போல் கடந்த உலக கோப்பை போட்டியின் போது டிரஸ்சிங் அறையில் நடந்த பல விவகாரங்கள் அம்பலமானதால், அணிக்குள் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டது. இது போன்ற சர்ச்சைகளை தவிர்க்க, இந்திய கிரிக்கெட் வாரியம் இப்போது கடுமையான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு 80 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று அதிகாலை மும்பையில் இருந்து புறப்பட்டது. அதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அலுவலர் ரத்னாகர் ஷெட்டி எழுதிய கடிதம் பற்றி இந்திய அணி வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த கடிதத்தில், வீரர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் கூறப்பட்டு இருந்தன.

குறிப்பாக போட்டி நடக்கும் போது மைதானத்தில் வீரர்கள் தங்கியிருக்கும் அறையிலும் (டிரஸ்சிங் அறை), அணி வீரர்கள் சந்திப்பு கூட்டங்களிலும் நடக்கும் விஷயங்கள் எந்த காரணத்தை கொண்டும் வெளியே கசிந்து விடாதபடி வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. மேலும், அணி நிர்வாகம் அனுமதி இல்லாமல் எந்த வீரரும் மீடியாவை சந்திக்க கூடாது என்ற கட்டுப்பாடு கடந்த சில தொடர்களை போல் இப்போதும் தொடர்ந்து நீடிக்கிறது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...