.

Thursday, June 21, 2007

கட் அவுட், பாலாபிஷேகம்: விஜய் கண்டிப்பு

நடிகர் விஜய் தனது பிறந்த நாளை ஜூன் 22-ம் தேதி கொண்டாடுகிறார். இதையொட்டி வடபழனியில் உள்ள ஷோபா திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாமுக்கும், ரத்த தான முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 100 ஏழை மாணவர்களின் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டுள்ள விஜய், இந்த ஆண்டு ஆறு லட்சம் நோட்டு புத்தகங்களையும் இலவசமாக வழங்குகிறார்.

மேலும் ஜூன் 22-ம் தேதி எழும்பூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்க மோதிரத்தை பரிசாக வழங்குகிறார்.

பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு புதன்கிழமை விஜய் விடுத்துள்ள அறிக்கை:

ஜூன் 22-ம் தேதி 'அழகிய தமிழ்மகன்' படப்பிடிப்பில் இருப்பதால் என்னைக் காண ரசிகர்கள் யாரும் நேரில் வரவேண்டாம். அதே சமயம் என் பிறந்த நாளுக்கு கட் அவுட் வைப்பது, பேனர் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது போன்ற தேவையில்லாத செலவுகளைச் செய்ய வேண்டாம்.

அதற்கு பதிலாக தங்கள் ஊரில் உள்ள ஏழை, எளியவர்களுக்கு சிறு உதவிகளைச் செய்தால் போதும். அவ்வாறு செய்வதையே ரசிகர்கள் எனக்குத் தரும் பிறந்த நாள் பரிசாக ஏற்றுக்கொள்வேன்.

தினமணி

8 comments:

Anonymous said...

கட் அவுட் வைப்பது, பேனர் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது போன்ற தேவையில்லாத செலவுகளைச் செய்ய வேண்டாம்.

It means " They should do without fail" right?? Ha Ha

ஸ்ருசல் said...

அதை தான் நானும் சொல்ல வந்தேன்.

செய்ய கூடாது என்றால் செய்ய வேண்டும் என்ற அர்த்தம்.

படத்தில் ரஜினியை போல் செய்தாகி விட்டது.. நிஜத்திலும் அவரை போல் செய்துவிடுவோம் என்ற எண்ணம்.

விஜயகாந்தின் வெற்றி, விஜயை யோசிக்க வைத்திருக்கிறது.

நோட்டு, தங்க மோதிரம்... நடக்கட்டும்..

ஏன் 21-ம் தேதி பிறந்தவர்கள் பாவப்பட்டவர்களா? யாருடைய அறுவை சிகிச்சை செலவை ஏற்றாலாவது நன்றாக இருக்கும்.

Anonymous said...

பாலாபிஷேகம் எல்லாம் இந்து மதவாத வழிமுறைகள். அனைவருக்கும் உர்சாக பாணமும் ரொட்டியும் சாப்பிட கொடுப்பது தான் செக்குலர். அதுவே சிறந்த கொண்டாட்டமும் ஆகும்.

நாமக்கல் சிபி said...

//ஏன் 21-ம் தேதி பிறந்தவர்கள் பாவப்பட்டவர்களா? //

அடப் பாவிகளா!

22ம் தேதிலயாவது செஞ்சிட்டுப் போகட்டுமே!

அதையும் விமர்சனம் பண்ணி அதையும் நிறுத்திடப் போறாங்கப்பா!

கோவி.கண்ணன் said...

//சுமார் 100 ஏழை மாணவர்களின் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டுள்ள விஜய், இந்த ஆண்டு ஆறு லட்சம் நோட்டு புத்தகங்களையும் இலவசமாக வழங்குகிறார்.
//

வருங்கால முதல்வர் இளைய தளபதி விஜய் வாழ்க !

:))))))))

Anonymous said...

vaika sonaalum thittuveenga..
onnum sollama irundhaalum.. kamnuney irruakaan paarunu solluveenga..

ippa "vendaamnu sonna. venum-nu artham"..

velaiya paarunga kaathamuththu

Anonymous said...

vijay has said this only now. Did he change his fan clubs to Narpani mandrams atleast? and did he go the theatres to stop the fans in doing all these things? He is appearing in media for every festive day. Did he appeal to his fans ?

Srusal, rightly said. vijay is a good actor off screen.

First let him stop advertising his charity works? athukapuram ellam thaan-ah nadakkum

Anonymous said...

"வாழ்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும்" வையகம் இவர்களே!!...

விஜய்க்கு எனது பிறந்த தின நல் வாழ்த்துக்கள்.
வாழ்க! வளமுடன்!!

-o❢o-

b r e a k i n g   n e w s...