.

Thursday, June 21, 2007

மதுரைமேற்கு: கருத்துக்கணிப்பு, வெளிஆட்கள் தடை!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மதுரை மேற்கு தொகுதியில் 26-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 (ன்படி 126-வது பிரிவின் கீழ் ஓட்டுப்பதிவு 48 மணி நேரத்துக்கு முன்னதாக பிரசாரம் ஓய வேண்டும். அதன்படி 24-ந்தேதி மாலை 5 மணியுடன் வேட்பாளர் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

மக்கள் அச்சமின்றி வாக்களித்து, தங்கள் பிரதிநிதியை தேர்வு செய்யலாம். மதுரை மேற்கு தொகுதிக்குள் வாக்களிக்க தகுதி இல்லாதவர்கள் தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பிரசார ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திர மாகவும் நடக்க ஒத்து ழைக்க வேண்டும்.

இதற்காக 24-ந்தேதி மாலை 5 மணிக்குப் பிறகு மதுரை மேற்கு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளிïர் நபர்கள் அனைவரும் வெளி யேற்றப்படுவார்கள். அவர்கள் மதுரை மேற்கு தொகுதிக்குள் தங்கி இருக்க தடை விதிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

24-ந்தேதி மாலை 5 மணிக்கு பிறகு மதுரை மேற்கு தொகுதியின் எல்லைகள் "சீல்'' வைக்கப்படும். இதனால் வெளி நபர்கள் தேவை இல்லாமல் மதுரை மேற்கு தொகுதிக்குள் நுழைய முடியாது.

அமைதியை சீர் குலைக்க முயற்சி செய்பவர்கள் தொகுதிக்குள் அனுமதிக்கப் பட மாட்டார்கள். மாநில அரசால் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் தலை வர்களும் 24-ந்தேதிக்குப் பிறகு தொகுதிக்குள் தங்கி இருக்க அனுதிக்கப்படமாட்டார்கள்.

24-ந்தேதி மாலை 5 மணிக்குப் பிறகு கருத்துக் கணிப்புகள் வெளியிட பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. அது போல வாக்களித்து விட்டு வரும் வாக்காளர்களிடம் நடத்தப்படும் கருத்துக்கணிப்புக்கும் தடை விதிக்கப்படுகிறது.

ஓட்டு போட்டு விட்டு திரும்புபவர்களிடம் எடுக்கப்படும் கருத்துக்கணிப்பை எக்காரணம் கொண்டும் 26-ந்தேதி மாலை 5 மணி வரை வெளி யிடவோ, ஒளிபரப்பு செய்ய வோ கூடாது.

கருத்துக்கணிப்பை வெளியிடும் அமைப்புகள், அது எத்தகைய பரப்பளவில், எத்தனை பேரிடம் எப்படி எடுத்தனர் என்பதை தெரி விக்க வேண்டும். கருத்துக் கணிப்பில் தங்களுக்கு உள்ள அனுபவம், தவறு சதவீதம், தொழில் பின்புறம், ஆகியவற்றையும் தெளிவுபட சொல்ல வேண்டும்.

இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

நன்றி: மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...