.

Saturday, February 17, 2007

சாகரன் உடல் தகனம்

சாகரன் அவர்களின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்தன. அவரது முதிர்ந்த தந்தையார் இறுதிச் சடங்குகளை நடத்த அவரது உடல் மின்மயானத்தில் சரியாக 3.55க்கு தகனம் செய்யப் பட்டது.

வலைப்பதிவர் கவிஞர் பாலபாரதியால் தமிழ்மணத்தின் சார்பாக மலர்வளையம் சார்த்தப் பட்டது. மேலும் உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக தேன்கூடு தந்த சாகரனுக்கு ரோஜா மாலை சமர்ப்பித்து அஞ்சலி செலுத்தினார்.

பதிவர்கள் மா.சிவகுமார், லக்கிலுக் ஆகியோர் அவருடன் மின் மயானம் வரை சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் பதிவர் இகாரஸ் பிரகாஷ் அவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

சாகரன் பங்கேற்றிருந்த முத்தமிழ் மன்ற உறுப்பினர்கள் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் பல வலைப்பதிவு அன்பர்கள், அவரது நெருங்கிய நண்பர்கள், அலுவலக தோழர்கள், உறவினர்களின் துயர அஞ்சலியுடன் அவரது இறுதிப் பயணம் நிறைவுற்றது

பாக்கிஸ்தானில் குண்டு வெடிப்பு

பாக்கிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 15பேராவது பலியாயிருப்பர் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

QUETTA, Pakistan (Reuters) - A judge and six lawyers were among 15 people killed in a suspected suicide bomb attack on a courtroom in the southwestern Pakistani city of Quetta on Saturday, the city's police chief said.

The bomb exploded while the court was in session and a senior judge and six lawyers were among those killed, police said. At last 25 people were injured and police chief Rahu Khan Brohi told Reuters six of them were in a critical condition.

இலங்கை ஆட்டம் பற்றி குரல் பதிவு

சிவராத்திரியில் கிரிக்கட் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சிகாகோ நேரம் 2:28AM (2/17/2007) இலங்கையின் ஆட்டம் பற்றி நண்பர்கள் விவாதிக்கிறார்கள்.


cricket an.mp3

கங்குலி ஆட இயலாமல் பெவிலியன் திரும்பினார்

துவக்க ஆட்டக்காரர் கங்குலி முதல் ஓவரிலேயே விளையாட இயலாமல் பெவிலியன் திரும்பினார்.(Retired hurt)

சசிதரூருக்கு அமைச்சர் பதவி ?

முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் துணைப்பொது செயலர் திரு.சசி தரூர், தனது பொதுச் செயலர் பதவிக்கான போட்டியின் தோல்வியின் பின்னணியில், இந்திய அரசின் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை
இராஜாங்க அமைச்சராக பதவியேற்கக்கூடும் என கூறுகிறது.

பிரதமர் மன்மோகன் அவரது பன்னாட்டு அனுபவங்களையும் அவருக்குள்ள நட்புவட்டத்தையும் பயன்படுத்திக் கொள்ள எண்ணியிருப்பதாக அரசின் உயர்மட்டங்களில் தொடர்புடையர்களின் ஆதாரத்தினைக் கொண்டு இச்செய்தி வந்துள்ளது.

பிரதமர் மனம் வைத்தாலும் காங்கிரஸ் 'மேலிடம்' மனம் வைக்குமா என்பதைப் பொறுத்து இருக்கும் அவரின் பதவியேற்பு.

இலங்கை 143/5 - 31 ஓவர்களில்

மேட்ச் துவங்க தாமதமானதால் 47 ஓவர்களுக்கு மட்டுமே விளையாடப் படுகிறது.

கடைசியாக அவுட் ஆனவர் திலகரத்னே துல்ஷன்.

ஹட்ச் நிறுவனத்தை கையகப்படுத்தும் வோடபோன் தலைமை அதிகாரி பிரதமருடன் சந்திப்பு

பிரட்டனை சேர்ந்த வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரி அருண் சரின் பிரதமர் மன் மோகன் சிங்கை தில்லியில் அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

ஹட்ச்-எஸ்ஸார் நிறுவனத்தில், ஹாங்காங்கைச் சேர்ந்த ஹட்சிசன் நிறுவனத்துக்குச் சொந்தமான பெரும்பான்மை (67 சதவீத) பங்குகளைக் கையகப்படுத்தும் முயற்சியில் வோடபோன் வெற்றிபெற்றுள்ளதை அடுத்து இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அருண் சரின், லண்டன் புறப்படுவதற்கு முன்னர் வெள்ளிகிழமை காலை பிரதமரை சந்தித்தார். அப்போது அவர் ஹட்ச்-எஸ்ஸார் சேவையை கிராமப்புறங்களுக்கும் விரிவு படுத்தும் திட்டத்தை வெளியிட்டார்.

ஹட்ச்-எஸ்ஸார் நிறுவனத்தின் 33 சதவீதப் பங்குகளை கையில் வைத்துள்ள எஸ்ஸார் நிறுவனத்துடன் கூட்டு தொடரும் என பிரதமரிடம் நம்பிக்கை தெரிவித்தார் அருண் சரின்.

10 கோடி வாடிக்கையாளர்களுடன் இந்தியாவின் முன்னணி செல்போன் சேவை நிறுவனமாக ஹட்ச்-எஸ்ஸாரை வளர்த்தெடுக்க, இன்னும் சில ஆண்டுகளில் வோடபோன் ரூ. 9 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அருண் சரின் ஏற்கெனவே கூறியிருந்தார். இவர் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினமணி

சாகரன் இறுதிச்சடங்கு இன்று


தேன்கூடு வலைதிரட்டியின் நிறுவனரும் சக வலைப்பதிவருமான சாகரன் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறுகின்றன. முழுவிவரம் இங்கே

அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு பெரும் பின்னடைவு

ஈராக்கிற்கு மேலதிகம் படைகளை அனுப்பும் முடிவில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க முடிவாக இது அமைந்துள்ளது.

மேலும் விபரங்களுக்கு

CNN
Reuters

-o❢o-

b r e a k i n g   n e w s...